Sunday, March 23, 2008

அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


தரையிலிருந்து சென்று தரையிலுள்ள இலக்கை தாக்கும் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் இந்த ஏவுகணை 700 முதல் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். ஒரிசாவில் உள்ள பாலாசோர் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 10.15 மணிக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் அக்னி 1 ஏவுகணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ம் தேதி இதே பகுதியிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.தற்போது இந்த சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது ராணுவ உயரதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.
(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

1 comment:

KARTHIK said...

//அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை //

இந்த மாதிரியான சோதனைகளுக்கு செலவிடுவதற்கு பதிலாக பல ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தலாம்.