Thursday, March 27, 2008

முகப் பருக்களை விரட்ட ஒளிக் கதிர் சிகிச்சை!


பருவ வயதில் பெரும்பாலானோருக்கும் முகப் பருக்கள் வருவது இயல்பு. ஆனால், பருவ வயதைக் கடந்த பின்பும் முகப் பரு பிரச்சனை நீங்காமல் தொடரும்பட்சத்தில்தான் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், 30 அல்லது 40 வயதைக் கடந்த பின்னரும் இப்பிரச்சனை உள்ளோருக்கு உகந்ததாக இருக்கிறது ஒளிக் கதிர் சிகிச்சை. நீல நிற ஒளி சிகிச்சையான இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த ஒளிக் கதிர் சிகிச்சை மூலம் முகப் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்கள் ஒழிக்கப்பட்டுவிடும். சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் இந்தச் சிகிச்சை முறையில் வலி இருக்கவே இருக்காது. மேலும், இந்த ஒளிக் கதிரில் தோலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர் கிடையாது. இம்முறையைப் பற்றி, தோல்லேசர் சிகிச்சை மையங்களின் மூலம் முழுமையான விவரங்களை அறிந்து, தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: