Thursday, March 27, 2008

வியக்க வைக்கும் 'வெங்காய' சிகிச்சை!


நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு என்றும், அதனை உரிய முறைகளில் பயன்படுத்தினால் வெவ்வேறு நலக்குறைவுகளுக்கும் எளிதில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் இயற்கை வைத்திய ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வெங்காயம் மூலம் எளிமையாக மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகள் இதோ... * சோகை, பாண்டு என்றெல்லாம் குறிப்பிடப்படும் வகையறா நோய்களுக்கு, பாலும் வெங்காயமும் சேர்த்து கொடுத்தால், நற்பலன் கிட்டும். * வயோதிகர்களின் இருமலுக்கு நிவாரணமாக, வதக்கிய வெங்காயத்தையும், வெல்லத்தையும் சேர்த்துக் கொடுத்தல் நன்மை பயக்கும். * வெங்காயத்தைச் சாறாக்கி குடித்தாலோ அல்லது சூப் செய்து அருந்தினாலோ வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
* பற்கள் தொடர்பான வியாதிகள் நீங்குவதற்கு, வெங்காயச் சாற்றினால் வாய் கொப்பளிக்க வேண்டும். * வெங்காயத்துடன் சிறிதளவு படிகாரம் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு துரிதமாக குணமடையும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: