Thursday, March 27, 2008

இடு‌ப்பு வ‌லி‌க்கு ‌சி‌‌கி‌ச்சை


ந‌‌ம்‌மி‌ல் பல‌ர் இடு‌ப்பு வ‌லியா‌ல் அவ‌தி‌ப்படுவது‌ண்டு. இத‌ற்கு எ‌ன்ன காரண‌‌ம் என பா‌ர்‌த்தா‌ல் முதுகெலு‌ம்பு‌த் தொட‌ரி‌ல் உ‌ள்ள ‌கீ‌ழ் முதுகெலு‌ம்புக‌ள் தே‌ய்வது தா‌ன் இடு‌ப்பு வ‌லி‌க்கு மு‌க்‌‌கியமான காரண‌‌ம் ஆகு‌ம்.இதுத‌விர முதுகை‌த் தவறாக இய‌க்குவது, காசநோ‌ய், பு‌ற்றுநோ‌ய் போ‌ன்ற நோ‌ய்க‌ள் முதுகெலு‌ம்பை‌ப் பா‌தி‌ப்பது ஆ‌கியவையு‌ம் இடு‌ப்பு வல‌ி‌க்கு வழி வகு‌க்கு‌ம். பொதுவாக இடு‌ப்பு வ‌லி‌க்கு‌த் தர‌ப்படு‌ம் ‌சி‌‌கி‌ச்சை முறைக‌ள் என பா‌ர்‌த்தா‌ல், வ‌லி ‌நிவார‌ணிகளுட‌ன் பூரண ஓ‌ய்வு. சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்கு படு‌க்கை‌யி‌ல் ம‌ல்லா‌ந்து படு‌‌த்து, முழ‌ங்கா‌லை 45 டி‌‌கி‌ரி கோண‌த்‌‌தி‌ல் மடி‌த்து‌ப் படுத்து‌க் கொ‌ண்டா‌ல் இடு‌ப்பு வ‌லி குறையு‌ம்.இ‌தி‌ல் வ‌லி குறையாதவ‌ர்களுக்கு டிரா‌க்‌ ஷன் முறை‌யி‌ல் கா‌லி‌ல் எடை போ‌ட்டு இழுத்து‌க் கட்டி ‌விடுவா‌ர்கள‌். இ‌ப்படி சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்குப் படுத்து‌க் கொ‌‌ண்டு ஓ‌ய்வெடு‌த்தா‌ல் இடு‌ப்பு வ‌லி குணமாகும்.மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு இடு‌ப்‌பி‌ல் ப‌ட்டை அ‌ணி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌‌ம். அ‌ப்படியு‌ம் இடு‌ப்பு வ‌லி குறையா‌வி‌ட்டா‌ல் அறுவை ‌சிக‌ி‌‌ச்சை தேவை‌ப்படு‌‌ம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: