Thursday, January 24, 2008

பிரிவோம் சந்திப்போம் --- ஒரு கவிதை

அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் எனக் கருதி அதிலிருந்து விடுபட்டு போகும் நாயகனும் சந்திக்கிற நிகழ்வுகளை உணர்ப்பூர்வமாக் சொல்லி ஜெயித்திருக்கிறார் இயக்குனர் கரு. பழனியப்பன் ! படம் பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம் நாயகன் சேரனுடையது.

மறுபுறம் வசதியான குடும்பத்தின் ஒரே மகள் சினேகா, சேரன் குடும்பத்து மனிதர்களைப் போன்றவர்களின் சகவாசத்திற்கு ஏங்கி நிற்பவர். கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை என்ற மனக் குறையை போக்க தோழிகளை வீட்டிற்கு அழைத்து கூடவே வைத்துக் கொள்பவர். இப்படி பாசத்திற்கு ஏங்குபவருக்கு சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகும் அதிர்ஷ்டம் அடிக்கிறது.இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன் என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார்.

ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு அவரை அக்குடும்பத்திலிருந்து பிரிக்கிறது. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு ஆளாகிறார் சினேகா.கூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் தனிமையில் இனிமை காணலாம் என வந்த சேரனுக்கோ அதிர்ச்சி !

ஆனால் முடிவோ நெகிழ்ச்சி ! அந்த செட்டிநாட்டுக் குடும்பம், பழக்கங்கள், திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அச்சு அசலாக காட்டி ஆவணப் படுத்தியிருக்கும் நேர்த்தி அழகுக்குக்காக இயக்குனர் கரு பழனியப்பனுக்கு மீண்டும் ஒரு ஷொட்டு !

சினேகா இந்த படத்தில் இன்னும் அழகு.அதிலும் கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அந்த அழகை பார்த்துக் கொண்டிருந்தால் பசியே எடுக்காது !

சேரன் வழக்கம்போல் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சேரன், இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு.டாக்டராக வரும் ஜெயராம் நினைவில் நிற்கிறார்.படமே கவிதையாக இருக்கும்போது பாடல்கள் வேறு இனிமையாக கருத்தாக அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன. எம்.எஸ். பிரபுவின் கேமரா எதையும் அழகாகவே படம் பிடித்துள்ளது.வில்லன், ரத்தக்களறி சண்டை, குத்துப்பாட்டு என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான,ஆனந்தம் விளையாடும் வீட்டிற்குள் தங்கிவிட்டு வந்த திருப்தி படம் பார்த்துவிட்டு வரும்போது !
(மூலம் - வெப்துனியா)



இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: