Sunday, May 11, 2008

தாம் தூம் தமில் பாடல்கள்


Cast: Jayam Ravi, Kangana Ranaut, Lakshmi Rai, Nizhalgal Ravi, Janaki Sabesh, Anu Haasan, Chethan, Mahadevan, Bose, Srinath, Mariya
Direction: Jeeva
Music: Harris Jayaraj

http://www.tamilmp3world.com/DhaamDhoom.html



இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

குருவி தமிழ் பாடல்கள்

Cast: Vijay, Trisha, Suman, Vivek, Manivannan, Malavika
Direction: Dharani
Production: Udhayanidhi
Music: விட்யசகர்

http://www.tamilmp3world.com/Kuruvi.html

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Thursday, March 27, 2008

காத்தவராயன் (2008) பாடல்கள்

காத்தவராயன் (2008)




Actors : கரன் , விடிஷா , வடிவேலு
Director : சலங்கை துரை
Music Director : ஸ்ரீகாந்த் தேவா

http://www.tamilmp3world.com/Kathavarayan.html

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சந்தோஷ் சுப்ரமணியம் (2008) பாடல்கள்


சந்தோஷ் சுப்ரமணியம் (2008)


Actors : ஜெயம் ரவி , ஜெனிலியா
Director : ராஜா
Music Director : தேவி ஸ்ரீ பிரசாத்

http://www.tamilmp3world.com/SantoshSubramaniam.html

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

இடு‌ப்பு வ‌லி‌க்கு ‌சி‌‌கி‌ச்சை


ந‌‌ம்‌மி‌ல் பல‌ர் இடு‌ப்பு வ‌லியா‌ல் அவ‌தி‌ப்படுவது‌ண்டு. இத‌ற்கு எ‌ன்ன காரண‌‌ம் என பா‌ர்‌த்தா‌ல் முதுகெலு‌ம்பு‌த் தொட‌ரி‌ல் உ‌ள்ள ‌கீ‌ழ் முதுகெலு‌ம்புக‌ள் தே‌ய்வது தா‌ன் இடு‌ப்பு வ‌லி‌க்கு மு‌க்‌‌கியமான காரண‌‌ம் ஆகு‌ம்.இதுத‌விர முதுகை‌த் தவறாக இய‌க்குவது, காசநோ‌ய், பு‌ற்றுநோ‌ய் போ‌ன்ற நோ‌ய்க‌ள் முதுகெலு‌ம்பை‌ப் பா‌தி‌ப்பது ஆ‌கியவையு‌ம் இடு‌ப்பு வல‌ி‌க்கு வழி வகு‌க்கு‌ம். பொதுவாக இடு‌ப்பு வ‌லி‌க்கு‌த் தர‌ப்படு‌ம் ‌சி‌‌கி‌ச்சை முறைக‌ள் என பா‌ர்‌த்தா‌ல், வ‌லி ‌நிவார‌ணிகளுட‌ன் பூரண ஓ‌ய்வு. சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்கு படு‌க்கை‌யி‌ல் ம‌ல்லா‌ந்து படு‌‌த்து, முழ‌ங்கா‌லை 45 டி‌‌கி‌ரி கோண‌த்‌‌தி‌ல் மடி‌த்து‌ப் படுத்து‌க் கொ‌ண்டா‌ல் இடு‌ப்பு வ‌லி குறையு‌ம்.இ‌தி‌ல் வ‌லி குறையாதவ‌ர்களுக்கு டிரா‌க்‌ ஷன் முறை‌யி‌ல் கா‌லி‌ல் எடை போ‌ட்டு இழுத்து‌க் கட்டி ‌விடுவா‌ர்கள‌். இ‌ப்படி சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்குப் படுத்து‌க் கொ‌‌ண்டு ஓ‌ய்வெடு‌த்தா‌ல் இடு‌ப்பு வ‌லி குணமாகும்.மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு இடு‌ப்‌பி‌ல் ப‌ட்டை அ‌ணி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌‌ம். அ‌ப்படியு‌ம் இடு‌ப்பு வ‌லி குறையா‌வி‌ட்டா‌ல் அறுவை ‌சிக‌ி‌‌ச்சை தேவை‌ப்படு‌‌ம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

வியக்க வைக்கும் 'வெங்காய' சிகிச்சை!


நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு என்றும், அதனை உரிய முறைகளில் பயன்படுத்தினால் வெவ்வேறு நலக்குறைவுகளுக்கும் எளிதில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் இயற்கை வைத்திய ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வெங்காயம் மூலம் எளிமையாக மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகள் இதோ... * சோகை, பாண்டு என்றெல்லாம் குறிப்பிடப்படும் வகையறா நோய்களுக்கு, பாலும் வெங்காயமும் சேர்த்து கொடுத்தால், நற்பலன் கிட்டும். * வயோதிகர்களின் இருமலுக்கு நிவாரணமாக, வதக்கிய வெங்காயத்தையும், வெல்லத்தையும் சேர்த்துக் கொடுத்தல் நன்மை பயக்கும். * வெங்காயத்தைச் சாறாக்கி குடித்தாலோ அல்லது சூப் செய்து அருந்தினாலோ வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
* பற்கள் தொடர்பான வியாதிகள் நீங்குவதற்கு, வெங்காயச் சாற்றினால் வாய் கொப்பளிக்க வேண்டும். * வெங்காயத்துடன் சிறிதளவு படிகாரம் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு துரிதமாக குணமடையும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பிணிகள் பல போக்க 'துளசி' வைத்தியம்


தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக மூலிகை வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மூலிகைகள் என்றாலே, பலருக்கும் எளிதில் நினைவுக்கு வருபவனவற்றில் 'துளசி'யும் ஒன்று. ஆன்மிக மனம் கமழும் இந்த மூலிகையில், பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அதை உரிய முறையில் பயன்படுத்தினால், பிணியின்றி ஆரோக்கியமாய் வாழலாம். அந்த வகையில் துளசி மூலிகை சிகிச்சைகள் சிலவற்றை இங்கே காண்போம்.* எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து துளசி இலைகளை அரைத்து, அதனை பூசி வந்தால், படை, பற்று போன்ற சரும நோய்கள் குணமடையும். * நீரிழிவு நோயுள்ளவர்கள், நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஒரு கைப்பிடி துளசி இலையை தினமும் காலை மென்று தின்று வருவது நன்மை தரும். * ஒரு பிடி துளசி இலைகளை கஷாயமாக்கி, அதனுடன் தேன், ஏலக்காய் பொடி மற்றும் காய்ச்சிய பசும்பாலைச் சேர்த்து பருகினால், உடல் பலம் பெற்று சுறுசுறுப்பு உண்டாகும். * முதல் நாள் துளசி இலைகள் இட்ட தண்ணீரில், மறுநாள் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். * துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டால், சிறுநீர் சீராக பிரியும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

முகப் பருக்களை விரட்ட ஒளிக் கதிர் சிகிச்சை!


பருவ வயதில் பெரும்பாலானோருக்கும் முகப் பருக்கள் வருவது இயல்பு. ஆனால், பருவ வயதைக் கடந்த பின்பும் முகப் பரு பிரச்சனை நீங்காமல் தொடரும்பட்சத்தில்தான் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், 30 அல்லது 40 வயதைக் கடந்த பின்னரும் இப்பிரச்சனை உள்ளோருக்கு உகந்ததாக இருக்கிறது ஒளிக் கதிர் சிகிச்சை. நீல நிற ஒளி சிகிச்சையான இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த ஒளிக் கதிர் சிகிச்சை மூலம் முகப் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்கள் ஒழிக்கப்பட்டுவிடும். சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் இந்தச் சிகிச்சை முறையில் வலி இருக்கவே இருக்காது. மேலும், இந்த ஒளிக் கதிரில் தோலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர் கிடையாது. இம்முறையைப் பற்றி, தோல்லேசர் சிகிச்சை மையங்களின் மூலம் முழுமையான விவரங்களை அறிந்து, தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

குடல் புண்ணைப் போக்க 'கீரை' வைத்தியம்!


குடல் புண், வாய்ப் புண் போன்றவற்றைப் போக்குவதற்கு மணத் தக்காளிக் கீரை என்றழைக்கப்படும் மிளகு தக்காளிக் கீரை துணைபுரிகிறது. நமது குடலில் புண் இருப்பதற்கான அறிகுறியே வாய்ப்புண் ஆகும்.குடல் புண்ணை உடனுக்குடன் கண்டறிந்து குணப்படுத்தாவிடில், மிகுந்த இன்னலைச் சந்திக்க நேரிடும்.குடல் புண்ணைக் குணப்படுத்த எளிமையான முறையைக் கையாளலாம். மணத் தக்காளிக் கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்குத் தவறாமல் சாப்பிட்டு வந்தாலே குடல் புண் காணாமல் போய்விடும் என்கின்றனர் மூலிகை மருத்துவர்கள். அத்துடன், இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் மிகுந்து காணப்படும் இந்தக் கீரையால், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

அஜீரணக் கோளாறுக்கு 'எலுமிச்சை' வைத்தியம்


துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களில் பெரும்பாலானோருக்கும் ஏற்படுவது சகஜமாகவே இருக்கிறது.இத்தகைய கோளாறு உள்ளவர்கள், எளிய முறையிலான வீட்டு வைத்திய முறையைக் கையாண்டாலே, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பயனடைலாம்.ஓர் எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் வெந்நீரில் பிழிந்துவிட வேண்டும். இதை, உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இப்படித் தவறாமல் செய்தால், அஜீரணக் கொளாறு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். ஏற்கெனவே அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், உணவு உண்ட பிறகு சில நிமிடங்கள் கழித்து மேற்குறிப்பிட்ட கலவையை அருந்தினாலும் பலனளிக்கும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாளைப் படிப்பதற்கு 10 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது போல், இந்தத் தேர்வுகளுக்கும் இதே கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 980 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.மேலும் தனித்தேர்வர்கள் எழுதுபவர்களையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.மொத்தம் 1,700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, கண்காணிப்பு பணிகளில் 6 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், தேர்வில் முறைகேடு செய்யும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மழை சேத விவரம் : ஸ்டாலின் விளக்கம்


தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட சேத விவரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். சட்டசபையில் நடந்த மழை வெள்ள நிவாரணம் குறித்த விவாதத்தி்ன்போது ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் இம்மாதம் 10ம் தேதியிலிருந்து பலத்த மழை பெய்துள்ளது. இதில் குறிப்பாக தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மார்ச்சில் தமிழகத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவு 19.9 மில்லி மீட்டர் தான். ஆனால், இந்த ஆண்டு 158.03 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமாக மார்ச் மாதத்தில் பெய்யும் மழை அளவைவிட இது 8 மடங்கு அதிகம்.
இந்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 97 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 77 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இம்மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 278 பேர் 41 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர்மழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். 804 கால்நடைகள் இறந்துள்ளன.மழை வெள்ளத்தால் 47 ஆயிரத்து 257 ஹெக்டேர் நெற்பயிர்கள், 2 லட்சத்து 79 ஆயிரத்து 143 ஹெக்டேர் தானியம் மற்றும் பருப்பு வகைகளும் நாசமாகியுள்ளன. 62 ஆயிரத்து 882 ஹெக்டேர் தோட்டப் பயிர்கள், 41 ஆயிரத்து 68 ஹெக்டேரில் இதர பயிர்களும் சேதமாகியுள்ளன.
மொத்தம் 10 லட்சத்து 62 ஆயிரத்து 965 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்த கனமழையில் 9 ஆயிரத்து 863 கி.மீ சாலைகள், 945 பாலங்கள், 747 குளங்கள் மற்றும் வாய்க்கால்களும் மழையால் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பாலா - கமல் இணைவார்களா..?


கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு கமலை வைத்து படமெடுக்க பாலா திட்டமிட்டுள்ளார் என்பதுதான்.

கமலை வைத்து படம் இயக்குவது என்பது இயக்குனர்கள் அனைவருக்குமே உள்ள கனவு. பாலாவுக்கும் இதே ஆசை. 'நான் கடவுள்' படத்துக்கு பின்னர் கமல் படத்தை ஆரம்பிப்பது அவரது திட்டம்.

'தசாவதாரம்' படத்துக்கு பின்னர் 'மர்மயோகி'யை இயக்கி நடிக்கவிருக்கிறார் கமல்.இதன் பிறகு பாலா கேட்டால் கமல் ஒப்புக்கொள்வார்கள் என்கின்றனர்.

காரணம், பாலா இயக்கத்தில் கமல் நடித்தால் ஒரு விருதுப்படம் நிச்சயம் என்பது கோடம்பாக்கம் போடும் கணக்கு.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Sunday, March 23, 2008

அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


தரையிலிருந்து சென்று தரையிலுள்ள இலக்கை தாக்கும் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் இந்த ஏவுகணை 700 முதல் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். ஒரிசாவில் உள்ள பாலாசோர் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 10.15 மணிக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் அக்னி 1 ஏவுகணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ம் தேதி இதே பகுதியிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.தற்போது இந்த சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது ராணுவ உயரதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.
(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Friday, March 7, 2008

கொடி 'பிடிக்கும்' விஜய்!


'தளபதி' ஆக முடிவு செய்து விட்டார் போல 'இளைய தளபதி' விஜய். தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக் கொடியை உருவாக்க உத்தரவிட்டுள்ளாராம் விஜய்.தனது ரசிகர் மன்றத்துக்கென தனியாக ஒரு கொடியை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ள விஜய், கொடி எப்படி இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளாராம். விரைவில் விஜய் ரசிகர் மன்றத்துக்குக் கொடி கிடைத்து விடும்.அவருக்கு நெருக்கமான சிலர்தான் இந்த கொடி டிசைனிங்கில் தீவிரமாக இறங்கியுள்ளனராம். சென்னையில் விஜய் நடத்திய இலவச திருமண நிகழ்ச்சியின்போது இந்த தகவலைக் கூறினார்.மேலும், மாவட்டந்தோறும் ஒரு கல்யாண மண்டபம் கட்டப் போகிறாராம் விஜய். அங்கு ஏழைகளுக்கு இலவசத் திருமணம் நடத்த மண்டபம் வழங்கப்படுமாம். மேலும் அந்த மண்டபங்கள் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத் தலைமை அலுவலகங்களாகவும் செயல்படுமாம்.முதலில் மன்றம், பிறகு கொடி, அப்புறம் அதிரடி என்பதுதான் சமீப காலத்திய அரசியல் நடிகர்களின் வழக்கமாக உள்ளது. முதலில் விஜயகாந்த், பிறகு சரத்குமார், அடுத்து விஜய்?


Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

தசாவதாரம் 'புக்கிங்' ஆரம்பம்

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் விற்பனையும், புக்கிங்கும் தொடங்கி விட்டது. கேரள விநியோக உரிமை ரூ. 2.25 கோடிக்கு விற்றுள்ளதாம்.தசாவதாரம் படத்தின் முதல் விநியோக விற்பனை இதுதான். கேரளாவில் வேறு ஒருவருக்கு படத்தை விற்றுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மற்றும் சில வெளிநாடுகளில் சொந்தமாகவே திரையிடத் திட்டமிட்டுள்ளார்.ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.கேரள உரிமையை என்.ஆர்.ஐ ஒருவர் எடுத்துள்ளார். கேரளாவில் லால் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரையிடுகிறார். இந்தலால் வேறு யாருமல்ல, தமிழில் சண்டக்கோழி, ஓரம்போ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் லால்தான். கேரளாவில் இவரும் இயக்குநர் சித்திக்கும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியிடப்படாத வகையில் அதிக அளவிலான தியேட்டர்களில் கேரளாவில் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது.மேலும் படத்தைப் பெற விநியோகஸ்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாம். மலையாளப் புத்தாண்டு விஷு அன்று தசாவதாரம் அங்கு ரிலீஸாகிறது. மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகியோரது படங்களும் அந்த சமயத்தில் வெளியாவதால் திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.இதற்கிடையே, ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமான அளவில் ஆடியோ ரிலீஸ் நடக்கவுள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக ரூ. 80 லட்சம் செலவில் பிரமாண்ட செலவுகளைச் செய்து வருகிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கி சான் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மீண்டும் பிகினியில் நமீதா


ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழா படத்தில் பிகினி உடையில் வருகிறார் நமீதா.முதல் படமான எங்கள் அண்ணாவில் மட்டும் நார்மலாக நடித்திருந்தார் நமீதா. ஆனால் அதன் பின்னர் முழுக் கவர்ச்சிக்கு மாறினார். இப்போது பிகினிக்கும் மாறி விட்டார்.தற்போது சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் பெருமாள் படத்தில் அவருக்கு ஜோடியாக திறமை காட்டி வரும் நமீதா, படப்பிடிப்புக்காக மொரீஷியஸில் படக்குழுவினரோடு முகாமிட்டிருக்கிறார். வின்சென்ட் செல்வாதான் இயக்குநர்.படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில், நமீதா டூ பீஸ் உடையில் டூமச் கவர்ச்சியில் கலகலக்க வைக்கிறாராம். மொரீஷியஸ் கடல் அழகின் பின்னணியில் சுந்தர்.சியோடு கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட டூ பீஸ் உடையில் கிளாமர் களியாட்டமே போட்டுள்ளாராம் நமீதா.ஏற்கனவே ஒரு படத்தில் டூ பீஸ் உடையில் வந்துள்ள நமீதா. இந்த முறை சற்றே கூடுதல் கவர்ச்சியாட்டம் போட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.இதைக் கேள்விப்பட்டதிலிருந்து இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதே ரேஞ்சுக்கு எங்களது படத்திலும் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை விடுக்கின்றனராம். அவரும் போனால் போகிறது, பரிசீலிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.இப்படத்தில் சுந்தர்.சி, காவல்துறை அதிகாரியாக வருகிறார். நடிக்க வந்த பின்னர் சுந்தர்.சி. காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.படத்தில் மீனாட்சி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கும் மொரீஷியஸ் பக்கம் வைத்து அழகான டூயட்டைப் படமாக்கியுள்ளனராம்.என்னதான் மீனாட்சி கிளாமராக நடித்தாலும் நமீதாவுக்கு முன்னால் அது எடுபடுமா என்பது பெட்டிங் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ஸ்ருதி கமல்ஹாசனின் இசை அருவி!


மும்பையில் நடந்த இசை இதழ் வெளியீட்டு விழாவின்போது அருமையான இசை நிகழ்ச்சியை நடத்திய மகள் ஸ்ருதி கமல்ஹாசனுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் முத்தமிட்டுப் பாராட்டினார்.அமெரிக்காவின் பிரபல இசை இதழ் ரோலிங் ஸ்டோன். இந்த இந்த இந்தியாவிலும் தற்போது வெளியாகவுள்ளது. இதன் தொடக்க விழா மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.ஆனந்த் மகிந்திரா முதல் இதழை வெளியிட்டார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஸ்ருதி கமல்ஹாசனின் இசை நிகழ்ச்சி நடந்தது.இந்த விழாவில் கமல்ஹாசன், கெளதமி, அக்சரா கமல், கெளதமியின் மகள் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ருதி நடிக்கப் போகும் முதல் தமிழ்ப் படத்தின் ஹீரோ மாதவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், ஸ்ருதியின் பிசிறில்லாத இசை விருந்தை கரவொலி எழுப்பிப் பாராட்டினர். தன் மகளை சான்றோர் பாராட்டியதால், மகிழ்ந்த தந்தை, மகளுக்கு அன்பு முத்தம் தந்தார்.நடிக்க வரப் போகும் ஸ்ருதி தற்போது இசை ஆல்பத்தை உருவாக்குவதில் படு பிசியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே.
Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சுஜாதா பெயரில் விருது- மனுஷ்யபுத்திரன்


சென்னை: எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் ஆண்டுதோறும் உயரிய இலக்கிய விருது வழங்கப்படும் என உயிர்மை பதிப்பக ஆசிரியரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் அறிவித்துள்ளார்.எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந் நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.


சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது.அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.


புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

'ரோபோட்'டில் திரு!


ஷங்கர்-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிரமாண்டப் படைப்பான ரோபோட் படத்தின் கேமராமேனாக திரு என்கிற திருநாவுக்கரசு பணியாற்றவுள்ளார். ரஜினி படத்தில் திரு இணைவது இதுவே முதல் முறையாகும்.முதல்வன் படத்திலிருந்து ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கும் கேமராமேனாக பணியாற்றி வந்தவர் கே.வி. ஆனந்த்தான். சிவாஜி வரை அவர்தான் ஷங்கரின் கனவுக் கண்களாக பணியாற்றி வந்தார்.இந் நிலையில் ரோபோட் படத்தில் ஆனந்த்தால் பணியாற்ற முடியவில்லை. காரணம், ஏவி.எம்மின் தயாரிப்பில் சூர்யா- தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஆனந்த் இயக்கப் போகிறார். இதனால் ரோபோட்டில் அவரால் பணியாற்ற இயலவில்லை.இதையடுத்து நீரவ் ஷாவை அணுகினார் ஷங்கர். அவரும் ஷங்கரின் அழைப்பை ஏற்றார். ஆனால், விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் ஷங்கர் அழைப்பை ஏற்க அவரால் இயலவில்லை.இதையடுத்து திருவை புக் செய்து விட்டார் ஷங்கர். திரு, கமல்ஹாசனால் பட்டை தீட்டப்பட்டவர். ஹேராம் உள்ளிட்ட கமல்ஹாசனின் சில படங்களில் திரு பணியாற்றியுள்ளார். அஜீத்தின் கிரீடம் படத்திற்கும் திருதான் கேமராக் கண்ணாக இருந்தார்.இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் பணியாற்றவுள்ளதால் சூப்பர் கேமராமேன் அந்தஸ்தைப் பெறுகிறார் திரு.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

இன்று குசேலன் படப்பிடிப்பு ஸ்டார்ட்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதை இயக்குநர் பி.வாசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தை தமிழில் ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா நடிப்பில் பி.வாசு ரீமேக் செய்கிறார்.இப்படத்தின் கதையை ரஜினிக்கேற்றவாறு மாற்ற பி.வாசு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு ரஜினி உடன்படவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தொடங்காமல் இழுபறியாக இருந்து வந்தது.படத்தின் கதையை மாற்றக் கூடாது, மொத்தமே 15 நாட்கள்தான் கால்ஷீட் என வாசுவிடம் ரஜினி கண்டிப்புடன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் குசேலன் படப்பிடிப்பு முறைப்படி இன்று தொடங்குகிறது. ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெறவுள்ளது.
பூஜையில் ரஜினிகாந்த்தும், பிற கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இரு நாயகிகளான நயனதாராவும், மீனாவும் கூட விழாவில் பங்கேற்கின்றனர்.முன்னதாக ஹைதராபாத்தின் ராமோஜிராவ் திரைப்பட நகரில் பூஜை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் ரஜினியின் வசதிக்கேற்ப தற்போது ஏவி.எம்முக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தெலுங்கு திரையுலகினரை திருப்திப்படுத்தும் வகையில் ஹைதராபாத்திலும் ஒரு பூஜை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமும், ஜி.பி.விஜயக்குமாரின் செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை கூட்டாக தயாரிக்கின்றன.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சட்ட மாணவர்கள் கைது

சென்னை: இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை யானைக்கவுனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.நள்ளிரவில் பாரிமுனை அருகே 4 மாணவர்கள் குடித்து விட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். செந்தில் குமார் அவர்களை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை கிண்டடித்தர். மேலும் அவரது சட்டையில் இருந்த பேட்ஜ்ஜை பறித்தோடு சட்டையையும் கிழித்தனர்.பேட்ஜ்ஜால் அவரது கழுத்தில் கீறினர். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் திருப்பித் தாக்கவே அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்தக் கும்பலில் இருந்த 2 பேரை பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களான மீனாட்சி சுந்தரம் ( 25), ராஜூ (24) எனத் தெரியவந்தது.அவர்களை போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source: Oneindia
இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ரஜினியால் நல்லாட்சி தர முடியும்- சோ


சென்னை: இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம். ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) மாநிலமாக மாற வாய்ப்பு இருக்கிறது என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கூறினார்.தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் எனும் ரஜினி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு சோ பேசியதாவது:இது ஒரு விநோதமான அதே நேரம் ரொம்ப விசேஷமான ஒரு விழா. ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை இதுவரை என் கண்ணில் காட்டவே இல்லை.இந்த விழாவுக்கு வந்திருக்கும் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், ஏவி.எம். சரவணன், விழாவுக்கு வராத கமல்ஹாசன் என எல்லாரும் இந்த நூலைப் படித்திருக்கிறார்கள், என்னைத் தவிர. புத்தகத்தைப் படிக்காமலேயே அதை வெளியிட்டும் விட்டேன்!ரஜினியைப் பொறுத்தவரை அவர் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய 'ஷோமேன்' என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவரைப் போன்ற எளிய மனிதரைப் பார்க்க முடியாது.திரைத்துறையில் இருந்து கொண்டு எந்த பகட்டும் இல்லாமலிருக்கும் இப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டாரை எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா?ரஜினியைப் புரிந்து கொள்வது கஷ்டம். யாராலும் விவரிக்க முடியாத, அதிசயங்களை உள்ளடக்கிய மனிதர் அவர். ரஜினி அரசியல் பேசுவார், என்னையும் உங்களையும் மற்றவர்களையும் விட நன்றாக அரசியலை அலசுவார், ஆனால் அவர் அரசியல்வாதி கிடையாது. அவர் ஆன்மீகம் பேசுவார், ஆனால் சந்நியாசி இல்லை.இன்றைக்கு அவர் அளவுக்கு சினிமாவைத் தெரிந்தவர்கள் வெகு அரிது. ஆனால் அவர் முழுநேர சினிமாக்காரர் கூட கிடையாது! தன்னைச் சுற்றி வருகிற பாப்புலாரிட்டி, தனது நிஜ மதிப்பு எல்லாமும் தெரிந்தும் அமைதியாகவே இருக்கிற ஒரு அபூர்வ மனிதர் அவர்.கடவுளின் அற்புதப் படைப்பு ரஜினி என்றால் ஒரு சதவிகிதம் கூட மிகையல்ல. கடவுளின் கட்டளைகளை முழுமையாக, சரியாக, நேர்மையாகப் பின்பற்றும் வெகு அரிதான மனிதர் அவர். உலகில் எத்தனைப் பேர் இத்தனை நல்ல குணங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து இன்றைக்கு அப்படி யாருமில்லை.இன்றைக்கு எந்த நடிகராவது வருடத்தில் 15 நாட்கள் தன்னை முழுமையாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ரிஷிகேஷ் போன்ற ஒரு காட்டுப் பகுதியில், ஓட்ஸ் கஞ்சி குடித்தபடி காலத்தைக் கழிக்கத் தயாராக இருக்கிறார்களா... சொல்லிப் பாருங்கள், தலைதெறிக்க ஓடிப்போவார்கள்.நான்கூட ஒரு முறை அவரிடம், ஏன் அடிக்கடி இப்படி ரிஷிகேஷ், இமயமலை என்று போய்விடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், உங்களை மாதிரி ஆளுங்க முத்தைக் கொஞ்ச நாளாவது பார்க்காம இருக்கலாமேன்னுதான் என்றார் தமாஷாக. நான்தான் ரஜினிக்கு ஆலோசகர் என்று பலரும் தப்பாக நினைத்துக் கொண்டு எழுதி வருகிறார்கள். என் ஆலோசனையைக் கேட்டிருந்தால் அவர் எப்படி இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்க முடியும்! என் பேச்சைக் கேட்ட யார் உருப்பட்டிருக்கிறார்கள்? அவர் என் பேச்சை ஒன்று கூடக் கேட்கவில்லை. அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றிகள் அவருக்குக் கிட்டியிருக்கின்றன.அவர் செய்ததெல்லாம் கடின உழைப்பு, நேர்மையான முயற்சிகள் மட்டும்தான். அதற்கு கடவுள் அளித்த பரிசுதான் இத்தனை பெரிய இடம். 'எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்தவரிடம் அதுகுறித்த கருத்துக்களைக் கேள்; தாமாகவே ஒரு முடிவை மேற்கொள்வதைவிட, கற்றறிந்த, அனுபவத்தில் சிறந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று ஒரு முடிவை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது. அப்படிச் செய்பவனே நல்ல நிர்வாகி' என்பது மகாபாரதம் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம்.குஜராத்தில் நரேந்திர மோடி ஜெயித்தது கூட அப்படித்தான். இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம்.ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) பசுமையான மாநிலமாக மாற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏன், குஜராத்தைவிட ஒருபடி மேலே முன்னேறிவிடும், ரஜினியின் ஆட்சி அமைந்தால்.குறையில்லாத மனிதர் ரஜினி. நியாய தர்மம் பார்ப்பவர், இரக்க சிந்தனை மிக்கவர். முக்கியமாக ஊழலற்ற, மனதில் வஞ்சம் வைத்துக்கொள்ளாத நல்லவர். ரஜினி மாதிரி நல்லவர்கள் ஆட்சி செய்தால்தான் இங்கே ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடக்கும். அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.இந்தப் புத்தகத்தில் கூட அவர் அரசியலுக்கு வரப்போவது குறித்து ஏதோ சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாராம் அதை எழுதிய பெண்மணி. அது கிடக்கட்டும்... உலக சரித்திரத்தில் முதல் முறையாக அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து அரசியலுக்கு வா வா என்று எந்த நடிகரையாவது அழைத்திருக்கிறார்களா... ரஜினியை மட்டும்தான் இன்னமும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அந்த நம்பிக்கை இன்னமும் அப்படியேதான் இருக்கு. மற்றதெல்லாம் ரஜினி கையில்தான் இருக்கு.நாட்டை ஆளும் பிரதமர் அல்லது மாநிலத்தை ஆளும் முதல்வர் யாராக இருந்தாலும் தன்னைவிட பதவி உயர்வானது என்ற நினைப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர் ரஜினி.நல்லவரான ரஜினிக்கு பதவி மீதோ, பணத்தின் மீதோ எந்த ஆசைகளும் கிடையாது. கொஞ்சம் பணம், புகழ் வந்தால் சிலருக்கு தலைக் கனம் வந்துவிடும். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் வந்த பிறகும் ரஜினிக்கு தலைக்கனம் கிடையாது. இல்லாவிட்டால் சிவாஜி பட வெற்றியில் தன் பங்கு எதுவுமில்லை, அது ஷங்கர், சரவணனால் கிடைத்த வெற்றி என்று சொல்லுவாரா? அவர்களுக்காகவா அந்தப் படம் ஓடியது... தன் வெற்றியைக் கூட சொந்தம் கொண்டாட விரும்பாத மனிதர் அவர்.அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவக் கூடும். கண்டிப்பாகப் படியுங்கள்...' என்றார் சோ.முன்னதாக புத்தகத்தை சோ வெளியிட, ரஜினியின் இளைய மகளும் ஆக்கர் ஸ்டியோவின் நிர்வாக இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோரும் பேசினர்.இயக்குநர்கள் பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், கார்த்தி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.புத்தகத்தை எழுதிய டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். ஓம் புக்ஸ் இண்டர்நேஷனல் எனும் நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ஒரே மேடையில் கருணாநிதி, ராமதாஸ், ரஜினி


இயக்குநர் தங்கர்பச்சானின் முயற்சியால் முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.நல்ல படங்களைக் கொடுப்பது மட்டுமல்லாமல், நல்ல விஷயங்களையும் செய்து அவ்வப்போது அசத்துபவர் தங்கர். அவரது கடுமையான முயற்சியால் ஒரு மிகப் பெரிய செயல் நடக்கப் போகிறது.அது, ஒரே மேடையில், கருணாநிதியும், ராமதாஸும், ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.கருணாநிதிக்கும், ரஜினிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ராமதாஸ்- ரஜினி மோதலை தமிழகம் மறந்திருக்காது. பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து பாமகவினர் செய்த ரகளை, அதனால் ஏற்பட்ட ரஜினி ரசிகர்களின் கொந்தளிப்புகள் என தமிழகமே அப்போது அல்லோகல்லப்பட்டது.ஆனால் காலப் போக்கில் இந்த மோதல் போக்கு நீர்த்துப் போனது. ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று ராமதாஸும், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியும் கோரிக்கை விட அதை ஏற்றார் ரஜினி. சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் அவர் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை.இந் நிலையில் இரு துருவங்களும் ஒரு மேடையில் சந்திக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதும் கூட இதுவே முதல் முறையாகும்.தங்கர் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் 100வது நாள் விழாவில் தான் இந்த அதிசயம் நடக்கப் போகிறது.நூறாவது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட நினைத்தார் தங்கர். உடனடியாக கருணாநிதி வீட்டுக்கும், ரஜினி வீட்டுக்கும் ஓடினார். இருவரையும் விழாவுக்கு வருமாறு அழைத்தார். கூடவே, ராமதாஸையும் அழைக்கவுள்ளேன் என்றும் அவர்களிடம் சொல்லி வைத்தார். அதற்கு இருவருமே ஆட்சேபிக்கவில்லையாம்.இதையடுத்து தைலாபுரம் தோட்டம் சென்று ராமதாஸை சந்தித்து, விஷயத்தைச் சொல்லி அவரது ஒப்புதலையும் பெற்றார்.விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடைபெறும் இடம், தினம், நேரம் ஆகியவை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தங்கர் தெரிவித்துள்ளார்.திமுக-பாமக மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இவர்களை ஒரே மேடைக்குக் கொண்டு வர ஓடியாடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.


Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Dhoni's dashers get rousing public felicitation


Mahendra Singh Dhoni and his daring young brigade were feted at a tumultuous public reception at the Ferozeshah Kotla Thursday afternoon for their historic first series win on Australian soil.Board of Control for Cricket in India (BCCI) president Sharad Pawar handed the players individual cheques for Rs 5.8 million each as an appreciation of their marvellous performance. Also rewarded were the eight members of the support staff, who received Rs. one million each, as over 30,000 cheering fans turned up at the Kotla to have a glimpse of the heroes.'We are proud of our cricketers. Also, Virat Kohli's under-19 team made us proud by winning the World Cup (in Kuala Lumpur Sunday),' said Pawar at the function that started more than hour late after its scheduled 3 p.m.Even as he hailed their fantastic performance down under, the BCCI chief struck a note of caution reminding the hordes of cricket fans who thronged both the airport and then the hotel that they should treat it as a sporting event where victory and defeat are part of the game.The weary team, which had a long haul from Brisbane to Singapore from where they took a flight to Mumbai, before getting onto a chartered flight to the national capital.The Board, as well as the Delhi and District Cricket Association (DDCA) officials, received the team at the Indira Gandhi International Airport as fans with drums and cymbals waved placards and tricolour lustily cheered the heroes who drove into the city in a colourful flower-bedecked bus.The players, who have often had to take a backseat to the Board officials, were this afternoon given the pride of place. The BCCI had received a lot of flak for pushing the players of the Twenty20 World Championship winning team to the back row in Mumbai in September and something similar happened when the there was another felicitation for the World Cup winning under-19 team in Bangalore earlier this week.Also present at the function were Lt. Governor Tejendra Khanna, Delhi Mayor Aarti Mehra, BCCI vice-president Rajeev Shukla, and Delhi and District Cricket Association (DDCA) president Arun Jaitley and other officials on the overcrowded dais.Jaitley said it was a momentous occasion for the venue. 'We are celebrating 75th year of Kotla this year and with this felicitation ceremony being organised, it can't get better,' Jaitley said.DDCA also gave another Rs. 2,50,000 to its own players Virender Sehwag, Gautam Gambhir, Ishant Sharma, and the two members of victorious Under-19 team, Virat Kohli and Pradeep Sangwan.The faces of the players said it all. They looked relieved to be back home - some of them after three months - at the end of the combustive tour, which will be remembered as much for the off-field fracas between the two teams as much as outstanding cricket the team played on field.The tired cricketers were to be brought to the Kotla in an open bus from the Indira Gandhi International Airport, 20 km away from the venue, but it was dropped, considering the players' tiredness and also the security reasons in view of Shivratri. They were instead taken to a five-star hotel near Connaught Place shopping complex from where they were brought to the stadium for the felicitation ceremony.On cancelling the open bus ride, Shukla said it was felt the players would be tired after changing two flights to reach Delhi and would be eager to get back home.


( Thanks - Indo Asian News Service )

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Thursday, March 6, 2008

பட்ஜெட் : எய்ட்ஸ் நோயை சமாளிக்க ரூ.900 கோடி



மக்களை அச்சுறுத்தும் உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயைச் சமாளிப்பதற்காக, 2008-09-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த நிலையில், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.அதன்படி, சுகாதாரத்துக்காக மொத்தம் ரூ. 16, 543 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முக்கிய அம்சங்களாவன:

* 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுகிறது.

* ஏப்ரல் 1 முதல் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ராஷ்டிரிய ஹெல்த் பிமா யோஜ்னா திட்டம் துவக்கப்படும்.

* ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுக்கான சேவைக்கான ஒதுக்கீடு ரூ.6,000 கோடியாக உயர்வு


(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

'சென்னை 600028' பாதிப்பில்லாத 'சரோஜா'!




சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் ரசித்து வந்த தமிழ் ரசிகர்களுக்கு, அடுத்த தெருவில் விளையாடும் விடலைகளின் சுவாரஸ்ய வாழ்க்கையை 'சென்னை 600028' மூலம் காட்டியவர், இயக்குனர் வெங்கட்பிரபு.

அனைவருக்கும் தெரிந்த கதைக்களத்தை தனக்கே உரிய பாணியில் சொன்ன இவர், அடுத்து 'சரோஜா' பட வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று வெவ்வேறு இடங்களில் நடக்கும் கிளைக்கதைகள், விபத்தாய் ஒன்றாக இணைகிற இடம்தான், படத்தின் கதை!


முந்தைய படத்தின் பாதிப்பு சிறிதளவும் இல்லாமல் தயாராகும் இப்படத்தில், 'சரோஜா' பாத்திரத்தில் மும்பை மாடலும், தியேட்டர் ஆர்ட்டிஸ்டுமான வேகா நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து, தமிழில் நாயகியாக அறிமுகமாகும் இவர், மும்பையில் உள்ள 'பிராட்வே' என்ற நாடக்குழுவில் அனுபவம் பெற்றவர்.

இப்படத்தில் எஸ்.பி.சரண், பிரேம்ஜி, 'சென்னை 28' சிவா, சுமந்த், சம்பத் உள்ளிட்டோரும், முக்கிய பாத்திரங்களில் ஜெயராம் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

'சின்ன மாப்ளே', 'அரவிந்தன்', 'ராசய்யா' போன்ற படங்களைத் தயாரித்த டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'சரோஜா'வை டிசம்பர் 7-ம் தேதி முதல் படமாக்குகிறார்கள்!

படக்குழு

கலை : வித்தேஷ்

சண்டைப்பயிற்சி : செல்வம்

நடனம் : கல்யாண்

நிர்வாக தயாரிப்பாளர்கள் : கிருஷ்ணமூர்த்தி - நாகேந்திரன்

தயாரிப்பு மேற்பார்வை : மகேந்திரன்

தயாரிப்பு : எஸ்.அருணா மகேஸ்வரி

ஒளிப்பதிவு : சக்தி சரவணன்

படத்தொகுப்பு : பிரவின் ஸ்ரீகாந்த்

இசை : யுவன் சங்கர் ராஜா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : வெங்கட்பிரபு


(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ராமன் தேடும் 5 சீதைகள்


மோசர் பேர் மற்றும் ப்ளூ ஓஸன் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'ராமன் தேடிய சீதை' சேரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, நிதின் சத்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் விமலாராமன், ரம்யா நம்பீசன், கார்த்திகா மற்றும் ஒரு புதுமுகம் ஆகியோர் உள்பட 5 கதாநாயகிகள். அனைவருக்குமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெறுகின்றன.

ஜெகன்நாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். ராஜேஸ்யாதவ் ஒளிப்பதிவு செய்ய, கோலா பாஸ்கர் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், நெல்லை ஜெயந்தா ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.

ஒருவனின் புறத்தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவனது அகத்தோற்றத்தை பார்த்து நேசிக்க வேண்டும் என்ற கருவை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மம்முட்டி- நயன் ஜோடி சேரும் 'யுவராஜ்'

மம்முட்டியுடன் நயன்தாரா ஜோடி சேரும் படம் 'யுவராஜ்'.

நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் நாகன் பிள்ளை தயாரிக்கும் இந்த படம் 'தஸ்காரா வீரன்' என்ற மலையாள படத்தின் தழுவல்.இப்படத்தில் மம்முட்டி, நயன்தாராவுடன் ஷீலா மற்றும் ராஜன் பி தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜோஸப் குடும்பத்தினருடன் வில்லன் நயவஞ்சமாக பழகுகிறான். ஒரு கட்டத்தில் ஜோஸப்பின் குடும்பத்தை அழித்துவிட்டு சொத்துக்களை அபகரித்துகொள்கிறான். அப்போது, சிறுவனாக இருக்கும் ஜோஸப் வில்லன் கும்பலிடமிருந்து தப்பி மும்பை செல்கிறார். அங்கு பெரிய தாதாவாக வளர்கிறார்.

இறுதியில் சொந்த ஊர் திரும்பி வில்லனை பழிவாங்குவதுதான் 'யுவராஜ்' படத்தின் கதை.

இப்படத்துக்கு ஒசபச்சான் இசையமைக்க, பிரமோத் பாப்பர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.


(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

நேபாளி பாடல்கள்

நேபாளி பாடல்கள்



Actors : Bharath, Meera Jasmine
Director : VZ Durai
Music Director : Srikanth Deva

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ஜோதா அக்பர் (Jodhaa Akbar) பாடல்கள்

ஜோதா அக்பர் (Jodhaa Akbar) தமிழ் பாடல்கள்



பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

'யாரடி நீ மோகினி'

ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கும் படம் 'யாரடி நீ மோகினி'.

இப்படத்தில் முதன் முறையாக தனுசுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா. தெலுங்கில் செல்வராகவன் எழுதி, இயக்கிய 'ஆடவரி மாட்லக்கு அர்த்தவே வேறுலே' படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இப்படம்.

இதை செல்வராகவனின் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்த மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார்.வேலை வெட்டி இல்லாத இளைஞனான தனுஷ், சாப்ட்வேர் இன்ஜினியரான நயன்தாராவை காதலிப்பதும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், அதை காதலர்கள் எதிர்கொள்வதும்தான் கதை.

இப்படத்தில் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை மற்றும் வசனம் செல்வராகவன்.

தெலுங்கு ரீ-மேக் என்றாலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் காட்சி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளதாம்.


(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ஜீவன் மிரட்டும் 'தோட்டா'


'மிரட்டல் நாயகன்' என்ற அடைமொழிக்கு ஏற்ப, தற்போது தான் நடித்துவரும் படத்தில் நிஜமாகவே அனைவரையும் மிரட்டும் வேடத்தில் நடித்திருக்கிறார் ஜீவன்.

ஒரு ரவுடியின் வாழ்க்கையில் நடக்கும் மோதல், காதல்... காதலில் ஜெயிக்க மீண்டும் மோதல். இது தான் 'தோட்டா'வின் கதை.

ரவுடியாக ஜீவன் நடித்திருக்கிறார். ஆட்டோ டிரைவரின் மகளாக ப்ரியாமணி. துப்பாகியிலிருந்து சீறி பாயும் தோட்டா போல், செம ஸ்பீடில் நகருமாம் திரைக்கதை.

படத்தில் விஷ்ணுப்ரியன், சரண்ராஜ், சம்பத், வாகை சந்திரசேகர், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, ராஜ்கபூர், மயில்சாமி, சபீதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பழனிபாரதி, பா.விஜய் மற்றும் கபிலன் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

சண்டைப் பயிற்சிகளில் தளபதி தினேஷ் அனல் கிளப்பியிருகிறார். கலை இயக்கம் சாமிரெட்டி ரமேஷ்.'

மலைக்கோட்டை'யை விட இதில் கூடுதலாக கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார் ப்ரியாமணி. கேரளாவிலுள்ள சாலக்குடி அருவியில் 'முத்தழகு' குளியல் போடும் காட்சி தியேட்டர்களில் சூட்டை கிளப்பும் என்கிறார்கள்.

'வா வா மாப்பிள்ளை... நீதாண்டா புது மாப்பிள்ளை' என்ற பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதரும், நடிகை நீபாவும் ஆடியுள்ளனர். பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்புமாம் இந்த பாட்டு.

எஸ்.பாஸ்கரின் ஆஸ்கார் மூவிஸ் வழங்க, ஸ்ரீநிதி சர்க்யூட்ஸ் பி.மாரியப்பா பாபு படத்தை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் செல்வா.
இவருக்கு 18வது படம் இது.பெற்றோர் துணையுடன் குழந்தைகள் பார்க்கலாம் என்ற வகையில் தோட்டவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

அறை எண் 305-ல் கடவுள்

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படைப்பே 'அறை எண் 305-ல் கடவுள்'. சாதாரண மனிதர்களான கஞ்சான கருப்புக்கும், சந்தானத்துக்கும் கடவுள் போல் வந்து உதவுகிறார் பிரகாஷ்ராஜ்.இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.

திரைக்கதையில் தனது ஆளுமையைக் காட்ட முயன்றிக்கிறார் சிம்பு தேவன் என்கிறது படக்குழு.ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அம்சமே 'செட்'டுகள்தான்.இந்தப் படத்துக்கென வித்தியாசமான பல்வேறு அரங்குகள் மிக பிரமாண்டமாகவும், தத்ரூபமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றுதான் 'நிலா'வைப் போன்ற அரங்கு.இந்த அரங்கை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் செல்வகுமார். இந்த நிலாவில், கஞ்சா கருப்பும், சந்தானமும் ஆடிப் பாடுவதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெரும் என்று சிம்பு தேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தக் கடவுளை ரசிகர்கள் அடுத்தமாதம் வெள்ளித்திரையில் தரிசிக்கலாம்!

படக்குழு
நடிகர், நடிகைகள் : பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு, சந்தானம், மதுமிதா, ஜோதிர்மயி, ராஜேஷ், இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், தலைவாசல் விஜய், மதன்பாப், குயிலி, சம்பத், வி.எம்.சி. ஹனி·பா, டெல்லி கணேஷ், சுகுமார், முத்துக்காளை, பெரியார்தாசன்.

இசை : வித்யாசாகர்

பாடல்கள்: முத்துலிங்கம், நா. முத்துக்குமார், பா. விஜய், யுகபாரதி, கபிலன்

ஒளிப்பதிவு : எஸ். செளந்தர்ராஜன்

படத்தொகுப்பு : ஜி. சசிகுமார்

கலை : செல்வகுமார்

சண்டைப் பயிற்சி : கிரேட் செல்வா

இயக்கம் : சிம்பு தேவன்

தயாரிப்பு : இயக்குனர் ஷங்கர்

(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மகா சிவராத்திரி : சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள்



மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.மகாசிவராத்திரி ன்று சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபட்டால் பெருவாழ்வு வாழலாம் என்பதும்,இன்று இரவு முழுவதும் கண் உறங்காமல் விழித்திருந்து சிவனை வழிபட்டால் பெரும் புண்ணியம் கிடைக்கும் எனபதும் பக்தர்களின் நம்பிக்கை.

இந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சீபுரம், தஞ்சை மற்றும் காளஹஸ்தி உள்ளிட்ட சிவாலயங்களில் பல்லாயிரக்கணக்கான சிவபக்தர்கள் கூடி சிவபெருமானை வழிபடுவார்கள்.மகாசிவராத்திரியையொட்டி இந்தக் கோவிலிகளில் இன்று 6 கால பூஜைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி அக்கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

தேவாரம் பிரச்சனைக்கு தீட்சிதர்கள் முற்றுப் புள்ளி



சிதம்பரம் நடராஜர் கோவில் திரு‌ச்சிற்றம்பல மேடையில் திருவாசகம் பாட வந்த சிவனடியார்களுக்கு கோவில் தீட்சிதர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பாட வைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவின் படி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததா‌ல் மோதல் உருவானது.

இ‌தி‌ல் 11 தீட்சிதர்கள், சிவனடியார் ஆறுமுகசாமி, அவரது ஆதரவாளர்கள் உ‌ள்பட 45 பேர் கைது செய்யப்பட்டு ‌சிறை‌யில் அடைக்கப்பட்டனர்.இ‌ந்‌நிலை‌யி‌ல், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடப்படுவதை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு நேற்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இப்பிரச்சனையில் சிவனடியார்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் , பாமக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் களமிறங்கின.

இதனால் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் காணப்பட்டு வந்தது.இதனால் நடராஜர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று காலை 10.15 மணியளவில் சிவனடியார்கள் குழுவுடன், மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த போராட்டக் குழுவினர் சுமார் 100 பேர் தேவாரம், திருவாசகம் பாடுவதற்காக நடராஜர் கோவிலுக்குச் செல்ல முற்பட்டனர்.

அப்போது தீட்சிதர்கள் 11 மணி வரை கால பூஜை நடைபெறும் என்பதால், அந்த பூஜை முடிந்த பிறகு தேவராம் பாடலாம் என்றும், அதுவரை பொறுத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.அதனை சிவனடியார்களும் ஏற்றுகொண்டனர்.

இதனையடுத்து 11.15 மணியளவில் 30 பேர் கொண்ட சிவனடியார்கள் குழு ஒன்று உள்ளே சென்றது.அவர்களை தீட்சிதர்கள் மிகுந்த மரியாதையுடன் அழைத்துச்சென்றனர். இதனையடுத்து சிவனடியார்கள் 5 பேர், கட்டணம் ஏதும் செலுத்தாமல் திருச்சிற்றம்பல மேடையேறி தேவராம் மற்றும் திருவாசகத்தை பக்திப் பிரவாகத்துடன் பாடி வணங்கினர்.அவர்களுடன் சேர்ர்ந்து சிதம்பரம் கூடுதல் போலீஸ் எஸ்.பி. செந்தில் வேலனும் சீருடையை கழற்றி விட்டு தேவாரம் பாடினார்.

தேவாரம் பாடிவிட்டு வந்த சிவனடியார்கள் 5 பேருக்கும் தீட்சிதர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.அரசு எச்சரிக்கையை தொடர்ந்து தேவாரம் பாட தீட்சிதர்கள் இன்று எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் இப்பிரச்சனைக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.


(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.10 கோடி பரிசு : பிசிசிஐ


முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பெங்களூரில் நேற்று இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், பிசிசிஐ தலைவர் ஷரத் பவார் இதனைத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து நாளை டெல்லி திரும்பும் இந்திய அணிக்கு, பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் அசாத்திய திறனையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ஐசிசி தரவரிசையில் முதலிடம்; பான்டிங்கை முந்தினார் சச்சின்


ஒருதினப் போட்டிகளுக்கான எல்ஜி-ஐசிசி தரவரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்கை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்தார் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டு இறுதி ஆட்டங்களில் சிறப்பாக பேட் செய்ததன் பலனாக, சச்சின் 777 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறினார்.

இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ரிக்கி பான்டிங், சச்சினைக் காட்டிலும் 7 புள்ளிகள் குறைவுடன் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து, முன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிராம் ஸ்மித் இருக்கிறார்.முத்தரப்புத் தொடரில் 300 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், 20 பேரை ஆட்டமிழக்கச் செய்த தோனி, 10-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

யுவராஜ் சிங் 18-ம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் வென்றதன் பலனாக, ஒருதின போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 3 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற இந்திய அணி 113 புள்ளிகளுடன் 4-வது இடத்தை வகிக்கிறது.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளன.

(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மெக்சிகோவை எளிதில் வென்றது இந்தியா -- ஹாக்கி

சாண்டியாகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான ஹாக்கி போட்டியில், மெக்சிகோவை 18-1 என்ற கோல் கணக்கில் எளிதாக இந்தியா வென்றது.
ராஜ்பால் சிங் மற்றும் பிரப்ஜோத் சிங் ஆகியோர் முறையே 6 மற்றும் 4 கோல்களை அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.
முன்னதாக 8-0 என்ற கணக்கில் ரஷ்யாவையும், 7-3 என்ற கணக்கில் ஆஸ்திரியாவையும் வீழ்த்திய இந்தியா, 9 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் சிலி ஆகிய அணிகளுடனும் தோல்வியுற்ற மெக்சிகோ, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, சிலி மற்றும் மெக்சிகோ ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் இந்த ஹாக்கித் தொடரில் வெற்றி பெறும் அணி, பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிங் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும்.
மொத்தம் 12 அணிகள் மோதும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் விளையாடுவதற்கு சீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஹாலந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Wednesday, March 5, 2008

மீண்டும் வருகிறான் 'மலையூர் மம்பட்டியான்'!


தன்னுடைய மகன் பிரசாந்தை ரசிகர்கள் எவரும் மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார் தியாகராஜன்.பழைய 'மலையூர் மம்பட்டியானுக்கு' புதிய முலாம் பூசி, தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ராஜசேகர் இயக்கத்தில் உருவான 'மலையூர் மம்பட்டியான்' படத்தை தமிழ் ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது.அந்தக் காலக்கட்டத்தில் சூப்பர் ஹிட்டான இப்படத்தின் நாயகன், தியாகராஜன்.இப்படத்தின் மூலம் மிகுந்த கவனத்தைப் பெற்ற தியாகராஜன், தன் மகனுக்கு மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் மலையூர் மம்பட்டியானை ரீமேக் செய்கிறார்.

தான் நடித்த கதாப்பாத்திரத்தில் மகன் பிரசாந்தை நடிக்க வைத்து, அப்படத்தை தானே இயக்குகிறார். மேற்குலகில் பிரபலமான 'ராபின் ஹுட்' வகையறாவைச் சேர்ந்த படமான 'மலையூர் மம்பட்டியான்', தமிழில் ஒரு ட்ரென்ட் செட்டராகவே இருந்தது. இப்படத்தின் ரீமேக்கிற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இம்மாதம் 19-ம் தேதி படப்பிடிப்பைத் துவங்குகிறார் தியாகராஜன். இதனிடையே, பிரசாந்த் நடிக்கும் 'புலன் விசாரணை - பாகம் 2' படத்தையும் வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது.
(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Tuesday, March 4, 2008

Nice Wordings

When Some one tries To Impress u.....
It means He or She is already impressed by U

Love and care are Sweet gifts.....

If u receive it, open and appreciate it.
If u dont worry someone,somewhere is still wrapping it for u


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

' திரைப்பட பெயர் : தமிழை சீ்ர்குலைத்தால் வரிச் சலுகை இல்லை '

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழை சீர்குலைத்து பெயர் சூட்டினால் அதற்கு வரிச் சலுகை கிடைக்காது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :
தமிழ் மொழியின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக தமிழ் மொழியில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகையை தமிழக அரசு அறிவித்தது.ஆனால் கடந்த சில காலங்களாக தமிழ்மொழி என்று சொல்லி தமிழ் மொழியைச் சிதைத்துச் சீர்குலைக்கின்ற வகையில் பெயர்கள் சூட்டப்பட்டு திரைப்படங்கள் வெளி வருகின்றன.
அவர்கள் தங்களுக்கும் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனால் அரசின் வரிச்சலுகை அறிவிப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுகிறது.
இதனால் தமிழுக்கு சிறிதும் பொருந்திவராத வகையில் பெயர் சூட்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு கண்டிப்பாக வரிச் சலுகை அளிக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Monday, March 3, 2008

வாழும்போதே வாழ்த்துவோம்


செத்த பிறகு மட்டுமே சிங்காரிக்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள் என்ற நிலை இனியாவது மாற வேண்டும்; கலைஞர்களை வாழும்போதே வாழ்த்துவோம் என்று சுஜாதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து ஆதங்கத்துடன் பேசினார்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை - நாரதகான சபாவில் நடந்தது.

பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், 'சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எந்த எழுத்தாளரும், வாசகனும் இனி எழுத முடியாது' என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி புகழ்ந்து பேசினார். 'மருதநாயகம்' படத்தில் தனது பெயரை போட வேண்டாம் என்று சுஜாதா கூறியதை நினைவுகூர்ந்த நடிகர் கமலஹாசன், சுஜாதாவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவங்களை விவரித்தார்.

சுஜாதாவை நாடக உலகு பயன்படுத்திக் கொண்ட அளவு, சினிமா உலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நடிகர் சிவகுமார்.

கவிஞர் வைரமுத்துவோ, 'இன்று அஞ்சலி செலுத்த வந்திருக்கும் கூட்டம், சுஜாதா உயிரோடு இருக்கும்போது வந்திருந்தால், அவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.செத்த பிறகு மட்டுமே சிங்காரிக்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள் என்ற நிலை இன்றிலிருந்தாவது மாற வேண்டும்' என்றார்.

'உயிர்மை' இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்ரன் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், பார்த்திபன், சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வசந்த், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி, சாருநிவேதிதா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Wednesday, February 27, 2008

இதயம்

என்னுடைய இதயம் உனக்கும் அல்ல .....


உனக்கு,உனக்கு மட்டும் தான்.....




இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

அ‌ஞ்சாதே - Review

அ‌ஞ்சாதே‌யி‌ன் ஒருவ‌ரி கதை, வழ‌க்கமான தாதா கதையோ என ‌நினை‌க்க வை‌க்கு‌ம். ஆனா‌ல், கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன் உலகை ‌மி‌ஷ்‌கி‌ன் அணு‌கி‌யிரு‌க்கு‌ம் ‌வித‌ம் த‌மி‌ழ் ‌சி‌‌னிமாவு‌க்கு பு‌திது.
நரேனு‌ம், அ‌ஜ்மலு‌ம் ந‌ண்ப‌ர்க‌ள். நரே‌ன் அடிதடி பா‌ர்‌ட்டி. அ‌ஜ்ம‌ல் எ‌ஸ்.ஐ. கனவோடு படி‌ப்பு, உட‌ற்ப‌யி‌ற்‌சி என இரு‌ப்பவ‌ர். போ‌‌‌லீ‌ஸ் தே‌ர்‌வி‌ல் ‌சிபா‌ரி‌சி‌ல் நரே‌ன் ஜெ‌யி‌க்க, அ‌ஜ்ம‌ல் தோ‌‌ற்‌கிறா‌ர்.


தோ‌ல்‌வி ந‌ண்ப‌ன் ‌மீது குரோதமாக மாறு‌கிறது. குடி, அடிதடி என பாதை மாறு‌கிறா‌ர் அ‌ஜ்ம‌ல். அவரை எ‌ப்படியு‌ம் ‌திரு‌த்துவது என தே‌டி‌த் தே‌டி போ‌கிறா‌ர் நரே‌ன். இ‌ந்த நேர‌த்‌தி‌ல் அ‌ஜ்மலை, பெ‌ண்களை கட‌த்‌தி பண‌ம் ப‌றி‌க்கு‌ம் வேலை‌க்கு பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்‌கிறா‌ர் ‌பிர‌ச‌ன்னா. அ‌தி‌லிரு‌ந்து ந‌ண்ப‌னை‌க் கா‌ப்பா‌ற்ற நரே‌ன் போராட, இறு‌தி‌யி‌ல் எ‌தி‌ர்பாராத ‌கிளைமா‌க்‌ஸ்.
மு‌த‌ன் முறையாக போ‌லீ‌ஸ் வேலை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் இளைஞ‌ன் எ‌தி‌ர் கொ‌ள்ளு‌ம் அவமான‌ங்க‌ள், தடுமா‌ற்ற‌ங்க‌ள் அனை‌த்தையு‌ம் நரே‌ன் கதாபா‌த்‌திர‌ம் மூலமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தி‌யிரு‌க்‌‌கிறா‌ர் ‌மி‌ஷ்‌கி‌ன்.

கு‌ர்தா, நீ‌ண்ட தலைமுடி, ம‌ணிக‌ட்டை முக‌த்து‌க்கு நேராக உய‌ர்‌த்‌தி ம‌ணி பா‌ர்‌க்கு‌ம் மேன‌ரிச‌ம் என தோ‌‌ற்ற‌த்‌‌திலு‌ம் நடி‌ப்‌பிலு‌‌ம் அச‌த்து‌கிறா‌ர் ‌பிர‌ச‌ன்னா.
அ‌ஜ்ம‌ல் ‌கி‌ளீ‌ன் ஷே‌வி‌‌லிரு‌ந்து தாடி ‌மீசை‌க்கு மா‌றிய ‌பிறகு அவ‌ர் நடி‌ப்‌பிலு‌ம் மா‌ற்ற‌ம். ந‌ண்பனை வெறு‌ப்பது‌ம், பிர‌ச‌ன்னா‌வி‌ன் தவறுகளு‌க்கு துணை போக முடியாம‌ல் த‌வி‌ப்பது, என க‌‌ச்‌சிதமான நடி‌ப்பு.

அ‌ஜ்ம‌லி‌ன் த‌ங்கையாக வரு‌ம் ‌விஜயல‌ட்சு‌மி, வி‌ல்லனாக வரு‌ம் பா‌ண்டியராஜ‌ன் ம‌ற்று‌ம் எ‌ம்.எ‌ஸ்.பா‌ஸ்கர‌ன், லி‌வி‌ங்‌‌‌ஸ்ட‌ன் என அனைவரு‌ம் யதா‌ர்‌த்த‌ம் ‌மீறாம‌ல் நடி‌த்‌திரு‌‌க்‌கிறா‌ர்க‌ள்.

கு‌ற்றவா‌ளிகள‌ி‌ன் கு‌ற்ற‌த்தை ம‌ட்டு‌ம் கா‌ட்டாம‌ல், அவ‌ர்க‌ளி‌ன் கு‌ற்ற‌ப் ‌பி‌ன்ன‌ணியையு‌ம் கா‌ட்ட முய‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர் ‌மி‌‌ஷ்‌கி‌ன். பெ‌ண்களை கட‌த்து‌ம் கா‌ல் ஊனமான அடியாளு‌க்கு குழ‌ந்தை, குடு‌‌‌ம்ப‌‌ம் கு‌றி‌த்த கவலை அவனது க‌ண்க‌ளி‌ல் தொ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. கா‌ல்களை ம‌ட்டுமே ‌திரை‌யி‌ல் கா‌ண்‌பி‌‌த்து கா‌‌ட்‌சியை ‌வி‌ள‌க்குவது, பட‌த்‌தி‌ல் பெரு‌ம்பகு‌தி வரு‌ம் மொ‌ட்டை அடியா‌ளி‌ன் முக‌த்தை இறு‌திவரை பா‌ர்வையாளனு‌க்கு க‌ா‌ட்டாம‌ல் இரு‌ப்பது என பட‌ம் முழு‌க்க ‌மி‌ஷ்‌கி‌னி‌ன் ‌திறமை ப‌ளி‌ச்‌சிடு‌கிறது.

எ‌ன்கவு‌ண்ட‌ர் போ‌‌லீஸாக வரு‌ம் பொ‌ன்வ‌ண்ண‌ன், சாகு‌ம்போது‌ம், நா‌ன் செ‌த்‌திடுவேனா எ‌ன்று அத‌ட்டலாக கே‌ட்கு‌ம் கை‌யி‌ல்லாத ந‌ண்ப‌ன் என ‌நினை‌வி‌ல் த‌ங்கு‌ம் கேர‌‌க்ட‌ர்க‌ள் ‌நிறைய.

க‌ற்ப‌ழி‌ப்புகளை கா‌ண்‌பி‌க்காம‌லே அத‌ன் வ‌லியை‌ச் சொ‌ல்ல இய‌க்குனரு‌க்கு தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது.

இறு‌க்கமான கதை‌க்கே‌ற்ற மகே‌ஷ் மு‌த்துசா‌மிய‌ி‌ன் ஒ‌ளி‌ப்ப‌திவு பட‌த்‌தி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய பல‌ம். கிளைமா‌க்‌ஸ் கா‌ட்‌சி கேமரா க‌விதை.

சு‌ந்த‌ர் ‌சி.பாபு‌க்கு எ‌ந்த இட‌த்தை இசை‌யி‌ல்லாம‌ல் மெளனமாக ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறது. பாட‌‌ல்களை ‌விட ‌பி‌ன்ன‌ணி‌ இசை‌யி‌ல் ‌பிரமாத‌ப்படு‌த்து‌கிறா‌ர்.

அ‌ஞ்சாதே ‌மி‌ஷ்‌கி‌னி‌ன் மகுட‌த்‌தி‌ல் இ‌ன்னொரு இறகு!

( நன்றி - webdunia )
இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Sunday, February 17, 2008

புதிய Mp3 பாடல்கள்

யாரடி நீ மோகினி

http://www.tamilmp3world.com/YaradiNeeMohini.html

தோட்டா

http://www.tamilmp3world.com/Thotta.html


பாடல்களை மேல் உள்ள தளத்தில் இருண்டு இறக்கவும்


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மீண்டும் வந்துவிட்டோம்

சிறிது அலுவல் வேலைகளுக்கு பிறகு நாங்கள் வந்துவிட்டோம்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Saturday, January 26, 2008

ANNA UNIVERSITY B.E. / B.TECH RESULTS....( OCT-NOV 2007 )

அண்ணா பல்கலைகழகம் B.E. / B.Tech தேர்வு முடிவுகள்

Results available Here.....

http://www.icqresults.com/tamilnadu/annauniv07/au07b.asp

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பாரதியார் பல்கலைகழகம் தேர்வு முடிவுகள்

பாரதியார் பல்கலைகழகம் தேர்வு முடிவுகள் ( Bharathiyar University UG Results oct 2007 )

http://www.b-u.ac.in/UGResults2008/

All The Best ......

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Thursday, January 24, 2008

பிரிவோம் சந்திப்போம் --- ஒரு கவிதை

அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் எனக் கருதி அதிலிருந்து விடுபட்டு போகும் நாயகனும் சந்திக்கிற நிகழ்வுகளை உணர்ப்பூர்வமாக் சொல்லி ஜெயித்திருக்கிறார் இயக்குனர் கரு. பழனியப்பன் ! படம் பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம் நாயகன் சேரனுடையது.

மறுபுறம் வசதியான குடும்பத்தின் ஒரே மகள் சினேகா, சேரன் குடும்பத்து மனிதர்களைப் போன்றவர்களின் சகவாசத்திற்கு ஏங்கி நிற்பவர். கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை என்ற மனக் குறையை போக்க தோழிகளை வீட்டிற்கு அழைத்து கூடவே வைத்துக் கொள்பவர். இப்படி பாசத்திற்கு ஏங்குபவருக்கு சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகும் அதிர்ஷ்டம் அடிக்கிறது.இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன் என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார்.

ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு அவரை அக்குடும்பத்திலிருந்து பிரிக்கிறது. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு ஆளாகிறார் சினேகா.கூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் தனிமையில் இனிமை காணலாம் என வந்த சேரனுக்கோ அதிர்ச்சி !

ஆனால் முடிவோ நெகிழ்ச்சி ! அந்த செட்டிநாட்டுக் குடும்பம், பழக்கங்கள், திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அச்சு அசலாக காட்டி ஆவணப் படுத்தியிருக்கும் நேர்த்தி அழகுக்குக்காக இயக்குனர் கரு பழனியப்பனுக்கு மீண்டும் ஒரு ஷொட்டு !

சினேகா இந்த படத்தில் இன்னும் அழகு.அதிலும் கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அந்த அழகை பார்த்துக் கொண்டிருந்தால் பசியே எடுக்காது !

சேரன் வழக்கம்போல் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சேரன், இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு.டாக்டராக வரும் ஜெயராம் நினைவில் நிற்கிறார்.படமே கவிதையாக இருக்கும்போது பாடல்கள் வேறு இனிமையாக கருத்தாக அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன. எம்.எஸ். பிரபுவின் கேமரா எதையும் அழகாகவே படம் பிடித்துள்ளது.வில்லன், ரத்தக்களறி சண்டை, குத்துப்பாட்டு என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான,ஆனந்தம் விளையாடும் வீட்டிற்குள் தங்கிவிட்டு வந்த திருப்தி படம் பார்த்துவிட்டு வரும்போது !
(மூலம் - வெப்துனியா)



இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

'ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு.....த‌னி ச‌ட்ட‌ம் ??


ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கல்ந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், இதுதொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மை‌‌‌தீ‌ன்கா‌ன் கூறியதாவது : ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, அதனை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு செய்து இதனை நடத்துவதற்கு அனுமதியை த‌மிழக அரசு பெற்றுத் தந்தது.ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் வருங்காலத்தில் தடையின்றி நடைபெறுவதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூ‌றினா‌ர்.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

தமிழ் புத்தாண்டு .....

நேற்று சட்ட சபையில் கவர்னர் அறிக்கை .....இனி தை 1 ம் தேதி ....தமிழ் வருட பிறப்பு . இதை எத்தனை பேர் ஒத்து கொள்வீர்கள். இது அரசியல் விவாதம் அல்ல . உண்மையான கருத்துக்களை கூரவும்.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

முதல் நன்றிகள்

நான் இந்த blog design பண்ண எனக்கு உதவிய வால்பையன் அருண் முதலாளிக்கும் , அவருடைய முதலாளி கார்த்தி முதலாளிக்கும் எனது நன்றிகள் ....

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

உங்க ஏரியா உள்ள வாங்க பா

எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்......

இது உங்க ஏரியா உள்ள வாங்க பா ....