Saturday, January 26, 2008

ANNA UNIVERSITY B.E. / B.TECH RESULTS....( OCT-NOV 2007 )

அண்ணா பல்கலைகழகம் B.E. / B.Tech தேர்வு முடிவுகள்

Results available Here.....

http://www.icqresults.com/tamilnadu/annauniv07/au07b.asp

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பாரதியார் பல்கலைகழகம் தேர்வு முடிவுகள்

பாரதியார் பல்கலைகழகம் தேர்வு முடிவுகள் ( Bharathiyar University UG Results oct 2007 )

http://www.b-u.ac.in/UGResults2008/

All The Best ......

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Thursday, January 24, 2008

பிரிவோம் சந்திப்போம் --- ஒரு கவிதை

அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் எனக் கருதி அதிலிருந்து விடுபட்டு போகும் நாயகனும் சந்திக்கிற நிகழ்வுகளை உணர்ப்பூர்வமாக் சொல்லி ஜெயித்திருக்கிறார் இயக்குனர் கரு. பழனியப்பன் ! படம் பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம் நாயகன் சேரனுடையது.

மறுபுறம் வசதியான குடும்பத்தின் ஒரே மகள் சினேகா, சேரன் குடும்பத்து மனிதர்களைப் போன்றவர்களின் சகவாசத்திற்கு ஏங்கி நிற்பவர். கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை என்ற மனக் குறையை போக்க தோழிகளை வீட்டிற்கு அழைத்து கூடவே வைத்துக் கொள்பவர். இப்படி பாசத்திற்கு ஏங்குபவருக்கு சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகும் அதிர்ஷ்டம் அடிக்கிறது.இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன் என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார்.

ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு அவரை அக்குடும்பத்திலிருந்து பிரிக்கிறது. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு ஆளாகிறார் சினேகா.கூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் தனிமையில் இனிமை காணலாம் என வந்த சேரனுக்கோ அதிர்ச்சி !

ஆனால் முடிவோ நெகிழ்ச்சி ! அந்த செட்டிநாட்டுக் குடும்பம், பழக்கங்கள், திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அச்சு அசலாக காட்டி ஆவணப் படுத்தியிருக்கும் நேர்த்தி அழகுக்குக்காக இயக்குனர் கரு பழனியப்பனுக்கு மீண்டும் ஒரு ஷொட்டு !

சினேகா இந்த படத்தில் இன்னும் அழகு.அதிலும் கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அந்த அழகை பார்த்துக் கொண்டிருந்தால் பசியே எடுக்காது !

சேரன் வழக்கம்போல் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சேரன், இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு.டாக்டராக வரும் ஜெயராம் நினைவில் நிற்கிறார்.படமே கவிதையாக இருக்கும்போது பாடல்கள் வேறு இனிமையாக கருத்தாக அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன. எம்.எஸ். பிரபுவின் கேமரா எதையும் அழகாகவே படம் பிடித்துள்ளது.வில்லன், ரத்தக்களறி சண்டை, குத்துப்பாட்டு என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான,ஆனந்தம் விளையாடும் வீட்டிற்குள் தங்கிவிட்டு வந்த திருப்தி படம் பார்த்துவிட்டு வரும்போது !
(மூலம் - வெப்துனியா)



இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

'ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு.....த‌னி ச‌ட்ட‌ம் ??


ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கல்ந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், இதுதொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மை‌‌‌தீ‌ன்கா‌ன் கூறியதாவது : ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, அதனை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு செய்து இதனை நடத்துவதற்கு அனுமதியை த‌மிழக அரசு பெற்றுத் தந்தது.ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் வருங்காலத்தில் தடையின்றி நடைபெறுவதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூ‌றினா‌ர்.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

தமிழ் புத்தாண்டு .....

நேற்று சட்ட சபையில் கவர்னர் அறிக்கை .....இனி தை 1 ம் தேதி ....தமிழ் வருட பிறப்பு . இதை எத்தனை பேர் ஒத்து கொள்வீர்கள். இது அரசியல் விவாதம் அல்ல . உண்மையான கருத்துக்களை கூரவும்.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

முதல் நன்றிகள்

நான் இந்த blog design பண்ண எனக்கு உதவிய வால்பையன் அருண் முதலாளிக்கும் , அவருடைய முதலாளி கார்த்தி முதலாளிக்கும் எனது நன்றிகள் ....

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

உங்க ஏரியா உள்ள வாங்க பா

எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்......

இது உங்க ஏரியா உள்ள வாங்க பா ....