Thursday, March 6, 2008

பட்ஜெட் : எய்ட்ஸ் நோயை சமாளிக்க ரூ.900 கோடி



மக்களை அச்சுறுத்தும் உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயைச் சமாளிப்பதற்காக, 2008-09-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த நிலையில், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.அதன்படி, சுகாதாரத்துக்காக மொத்தம் ரூ. 16, 543 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முக்கிய அம்சங்களாவன:

* 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுகிறது.

* ஏப்ரல் 1 முதல் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ராஷ்டிரிய ஹெல்த் பிமா யோஜ்னா திட்டம் துவக்கப்படும்.

* ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுக்கான சேவைக்கான ஒதுக்கீடு ரூ.6,000 கோடியாக உயர்வு


(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: