Friday, March 7, 2008

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சட்ட மாணவர்கள் கைது

சென்னை: இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை யானைக்கவுனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.நள்ளிரவில் பாரிமுனை அருகே 4 மாணவர்கள் குடித்து விட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். செந்தில் குமார் அவர்களை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை கிண்டடித்தர். மேலும் அவரது சட்டையில் இருந்த பேட்ஜ்ஜை பறித்தோடு சட்டையையும் கிழித்தனர்.பேட்ஜ்ஜால் அவரது கழுத்தில் கீறினர். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் திருப்பித் தாக்கவே அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்தக் கும்பலில் இருந்த 2 பேரை பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களான மீனாட்சி சுந்தரம் ( 25), ராஜூ (24) எனத் தெரியவந்தது.அவர்களை போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source: Oneindia
இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: