Thursday, March 27, 2008

பிணிகள் பல போக்க 'துளசி' வைத்தியம்


தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக மூலிகை வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மூலிகைகள் என்றாலே, பலருக்கும் எளிதில் நினைவுக்கு வருபவனவற்றில் 'துளசி'யும் ஒன்று. ஆன்மிக மனம் கமழும் இந்த மூலிகையில், பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அதை உரிய முறையில் பயன்படுத்தினால், பிணியின்றி ஆரோக்கியமாய் வாழலாம். அந்த வகையில் துளசி மூலிகை சிகிச்சைகள் சிலவற்றை இங்கே காண்போம்.* எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து துளசி இலைகளை அரைத்து, அதனை பூசி வந்தால், படை, பற்று போன்ற சரும நோய்கள் குணமடையும். * நீரிழிவு நோயுள்ளவர்கள், நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஒரு கைப்பிடி துளசி இலையை தினமும் காலை மென்று தின்று வருவது நன்மை தரும். * ஒரு பிடி துளசி இலைகளை கஷாயமாக்கி, அதனுடன் தேன், ஏலக்காய் பொடி மற்றும் காய்ச்சிய பசும்பாலைச் சேர்த்து பருகினால், உடல் பலம் பெற்று சுறுசுறுப்பு உண்டாகும். * முதல் நாள் துளசி இலைகள் இட்ட தண்ணீரில், மறுநாள் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். * துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டால், சிறுநீர் சீராக பிரியும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: