Thursday, March 6, 2008

மெக்சிகோவை எளிதில் வென்றது இந்தியா -- ஹாக்கி

சாண்டியாகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான ஹாக்கி போட்டியில், மெக்சிகோவை 18-1 என்ற கோல் கணக்கில் எளிதாக இந்தியா வென்றது.
ராஜ்பால் சிங் மற்றும் பிரப்ஜோத் சிங் ஆகியோர் முறையே 6 மற்றும் 4 கோல்களை அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.
முன்னதாக 8-0 என்ற கணக்கில் ரஷ்யாவையும், 7-3 என்ற கணக்கில் ஆஸ்திரியாவையும் வீழ்த்திய இந்தியா, 9 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் சிலி ஆகிய அணிகளுடனும் தோல்வியுற்ற மெக்சிகோ, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, சிலி மற்றும் மெக்சிகோ ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் இந்த ஹாக்கித் தொடரில் வெற்றி பெறும் அணி, பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிங் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும்.
மொத்தம் 12 அணிகள் மோதும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் விளையாடுவதற்கு சீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஹாலந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: