Thursday, March 27, 2008

குடல் புண்ணைப் போக்க 'கீரை' வைத்தியம்!


குடல் புண், வாய்ப் புண் போன்றவற்றைப் போக்குவதற்கு மணத் தக்காளிக் கீரை என்றழைக்கப்படும் மிளகு தக்காளிக் கீரை துணைபுரிகிறது. நமது குடலில் புண் இருப்பதற்கான அறிகுறியே வாய்ப்புண் ஆகும்.குடல் புண்ணை உடனுக்குடன் கண்டறிந்து குணப்படுத்தாவிடில், மிகுந்த இன்னலைச் சந்திக்க நேரிடும்.குடல் புண்ணைக் குணப்படுத்த எளிமையான முறையைக் கையாளலாம். மணத் தக்காளிக் கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்குத் தவறாமல் சாப்பிட்டு வந்தாலே குடல் புண் காணாமல் போய்விடும் என்கின்றனர் மூலிகை மருத்துவர்கள். அத்துடன், இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் மிகுந்து காணப்படும் இந்தக் கீரையால், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: