Thursday, March 27, 2008

அஜீரணக் கோளாறுக்கு 'எலுமிச்சை' வைத்தியம்


துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களில் பெரும்பாலானோருக்கும் ஏற்படுவது சகஜமாகவே இருக்கிறது.இத்தகைய கோளாறு உள்ளவர்கள், எளிய முறையிலான வீட்டு வைத்திய முறையைக் கையாண்டாலே, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பயனடைலாம்.ஓர் எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் வெந்நீரில் பிழிந்துவிட வேண்டும். இதை, உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இப்படித் தவறாமல் செய்தால், அஜீரணக் கொளாறு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். ஏற்கெனவே அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், உணவு உண்ட பிறகு சில நிமிடங்கள் கழித்து மேற்குறிப்பிட்ட கலவையை அருந்தினாலும் பலனளிக்கும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: