Friday, March 7, 2008

கொடி 'பிடிக்கும்' விஜய்!


'தளபதி' ஆக முடிவு செய்து விட்டார் போல 'இளைய தளபதி' விஜய். தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக் கொடியை உருவாக்க உத்தரவிட்டுள்ளாராம் விஜய்.தனது ரசிகர் மன்றத்துக்கென தனியாக ஒரு கொடியை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ள விஜய், கொடி எப்படி இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளாராம். விரைவில் விஜய் ரசிகர் மன்றத்துக்குக் கொடி கிடைத்து விடும்.அவருக்கு நெருக்கமான சிலர்தான் இந்த கொடி டிசைனிங்கில் தீவிரமாக இறங்கியுள்ளனராம். சென்னையில் விஜய் நடத்திய இலவச திருமண நிகழ்ச்சியின்போது இந்த தகவலைக் கூறினார்.மேலும், மாவட்டந்தோறும் ஒரு கல்யாண மண்டபம் கட்டப் போகிறாராம் விஜய். அங்கு ஏழைகளுக்கு இலவசத் திருமணம் நடத்த மண்டபம் வழங்கப்படுமாம். மேலும் அந்த மண்டபங்கள் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத் தலைமை அலுவலகங்களாகவும் செயல்படுமாம்.முதலில் மன்றம், பிறகு கொடி, அப்புறம் அதிரடி என்பதுதான் சமீப காலத்திய அரசியல் நடிகர்களின் வழக்கமாக உள்ளது. முதலில் விஜயகாந்த், பிறகு சரத்குமார், அடுத்து விஜய்?


Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

தசாவதாரம் 'புக்கிங்' ஆரம்பம்

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் விற்பனையும், புக்கிங்கும் தொடங்கி விட்டது. கேரள விநியோக உரிமை ரூ. 2.25 கோடிக்கு விற்றுள்ளதாம்.தசாவதாரம் படத்தின் முதல் விநியோக விற்பனை இதுதான். கேரளாவில் வேறு ஒருவருக்கு படத்தை விற்றுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மற்றும் சில வெளிநாடுகளில் சொந்தமாகவே திரையிடத் திட்டமிட்டுள்ளார்.ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.கேரள உரிமையை என்.ஆர்.ஐ ஒருவர் எடுத்துள்ளார். கேரளாவில் லால் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரையிடுகிறார். இந்தலால் வேறு யாருமல்ல, தமிழில் சண்டக்கோழி, ஓரம்போ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் லால்தான். கேரளாவில் இவரும் இயக்குநர் சித்திக்கும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியிடப்படாத வகையில் அதிக அளவிலான தியேட்டர்களில் கேரளாவில் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது.மேலும் படத்தைப் பெற விநியோகஸ்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாம். மலையாளப் புத்தாண்டு விஷு அன்று தசாவதாரம் அங்கு ரிலீஸாகிறது. மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகியோரது படங்களும் அந்த சமயத்தில் வெளியாவதால் திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.இதற்கிடையே, ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமான அளவில் ஆடியோ ரிலீஸ் நடக்கவுள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக ரூ. 80 லட்சம் செலவில் பிரமாண்ட செலவுகளைச் செய்து வருகிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கி சான் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மீண்டும் பிகினியில் நமீதா


ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழா படத்தில் பிகினி உடையில் வருகிறார் நமீதா.முதல் படமான எங்கள் அண்ணாவில் மட்டும் நார்மலாக நடித்திருந்தார் நமீதா. ஆனால் அதன் பின்னர் முழுக் கவர்ச்சிக்கு மாறினார். இப்போது பிகினிக்கும் மாறி விட்டார்.தற்போது சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் பெருமாள் படத்தில் அவருக்கு ஜோடியாக திறமை காட்டி வரும் நமீதா, படப்பிடிப்புக்காக மொரீஷியஸில் படக்குழுவினரோடு முகாமிட்டிருக்கிறார். வின்சென்ட் செல்வாதான் இயக்குநர்.படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில், நமீதா டூ பீஸ் உடையில் டூமச் கவர்ச்சியில் கலகலக்க வைக்கிறாராம். மொரீஷியஸ் கடல் அழகின் பின்னணியில் சுந்தர்.சியோடு கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட டூ பீஸ் உடையில் கிளாமர் களியாட்டமே போட்டுள்ளாராம் நமீதா.ஏற்கனவே ஒரு படத்தில் டூ பீஸ் உடையில் வந்துள்ள நமீதா. இந்த முறை சற்றே கூடுதல் கவர்ச்சியாட்டம் போட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.இதைக் கேள்விப்பட்டதிலிருந்து இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதே ரேஞ்சுக்கு எங்களது படத்திலும் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை விடுக்கின்றனராம். அவரும் போனால் போகிறது, பரிசீலிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.இப்படத்தில் சுந்தர்.சி, காவல்துறை அதிகாரியாக வருகிறார். நடிக்க வந்த பின்னர் சுந்தர்.சி. காவல்துறை அதிகாரியாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.படத்தில் மீனாட்சி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கும் மொரீஷியஸ் பக்கம் வைத்து அழகான டூயட்டைப் படமாக்கியுள்ளனராம்.என்னதான் மீனாட்சி கிளாமராக நடித்தாலும் நமீதாவுக்கு முன்னால் அது எடுபடுமா என்பது பெட்டிங் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ஸ்ருதி கமல்ஹாசனின் இசை அருவி!


மும்பையில் நடந்த இசை இதழ் வெளியீட்டு விழாவின்போது அருமையான இசை நிகழ்ச்சியை நடத்திய மகள் ஸ்ருதி கமல்ஹாசனுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் முத்தமிட்டுப் பாராட்டினார்.அமெரிக்காவின் பிரபல இசை இதழ் ரோலிங் ஸ்டோன். இந்த இந்த இந்தியாவிலும் தற்போது வெளியாகவுள்ளது. இதன் தொடக்க விழா மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.ஆனந்த் மகிந்திரா முதல் இதழை வெளியிட்டார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஸ்ருதி கமல்ஹாசனின் இசை நிகழ்ச்சி நடந்தது.இந்த விழாவில் கமல்ஹாசன், கெளதமி, அக்சரா கமல், கெளதமியின் மகள் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ருதி நடிக்கப் போகும் முதல் தமிழ்ப் படத்தின் ஹீரோ மாதவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், ஸ்ருதியின் பிசிறில்லாத இசை விருந்தை கரவொலி எழுப்பிப் பாராட்டினர். தன் மகளை சான்றோர் பாராட்டியதால், மகிழ்ந்த தந்தை, மகளுக்கு அன்பு முத்தம் தந்தார்.நடிக்க வரப் போகும் ஸ்ருதி தற்போது இசை ஆல்பத்தை உருவாக்குவதில் படு பிசியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே.
Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சுஜாதா பெயரில் விருது- மனுஷ்யபுத்திரன்


சென்னை: எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் ஆண்டுதோறும் உயரிய இலக்கிய விருது வழங்கப்படும் என உயிர்மை பதிப்பக ஆசிரியரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் அறிவித்துள்ளார்.எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந் நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.


சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது.அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.


புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

'ரோபோட்'டில் திரு!


ஷங்கர்-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிரமாண்டப் படைப்பான ரோபோட் படத்தின் கேமராமேனாக திரு என்கிற திருநாவுக்கரசு பணியாற்றவுள்ளார். ரஜினி படத்தில் திரு இணைவது இதுவே முதல் முறையாகும்.முதல்வன் படத்திலிருந்து ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கும் கேமராமேனாக பணியாற்றி வந்தவர் கே.வி. ஆனந்த்தான். சிவாஜி வரை அவர்தான் ஷங்கரின் கனவுக் கண்களாக பணியாற்றி வந்தார்.இந் நிலையில் ரோபோட் படத்தில் ஆனந்த்தால் பணியாற்ற முடியவில்லை. காரணம், ஏவி.எம்மின் தயாரிப்பில் சூர்யா- தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஆனந்த் இயக்கப் போகிறார். இதனால் ரோபோட்டில் அவரால் பணியாற்ற இயலவில்லை.இதையடுத்து நீரவ் ஷாவை அணுகினார் ஷங்கர். அவரும் ஷங்கரின் அழைப்பை ஏற்றார். ஆனால், விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் ஷங்கர் அழைப்பை ஏற்க அவரால் இயலவில்லை.இதையடுத்து திருவை புக் செய்து விட்டார் ஷங்கர். திரு, கமல்ஹாசனால் பட்டை தீட்டப்பட்டவர். ஹேராம் உள்ளிட்ட கமல்ஹாசனின் சில படங்களில் திரு பணியாற்றியுள்ளார். அஜீத்தின் கிரீடம் படத்திற்கும் திருதான் கேமராக் கண்ணாக இருந்தார்.இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் பணியாற்றவுள்ளதால் சூப்பர் கேமராமேன் அந்தஸ்தைப் பெறுகிறார் திரு.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

இன்று குசேலன் படப்பிடிப்பு ஸ்டார்ட்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதை இயக்குநர் பி.வாசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தை தமிழில் ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா நடிப்பில் பி.வாசு ரீமேக் செய்கிறார்.இப்படத்தின் கதையை ரஜினிக்கேற்றவாறு மாற்ற பி.வாசு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு ரஜினி உடன்படவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தொடங்காமல் இழுபறியாக இருந்து வந்தது.படத்தின் கதையை மாற்றக் கூடாது, மொத்தமே 15 நாட்கள்தான் கால்ஷீட் என வாசுவிடம் ரஜினி கண்டிப்புடன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் குசேலன் படப்பிடிப்பு முறைப்படி இன்று தொடங்குகிறது. ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெறவுள்ளது.
பூஜையில் ரஜினிகாந்த்தும், பிற கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இரு நாயகிகளான நயனதாராவும், மீனாவும் கூட விழாவில் பங்கேற்கின்றனர்.முன்னதாக ஹைதராபாத்தின் ராமோஜிராவ் திரைப்பட நகரில் பூஜை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் ரஜினியின் வசதிக்கேற்ப தற்போது ஏவி.எம்முக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தெலுங்கு திரையுலகினரை திருப்திப்படுத்தும் வகையில் ஹைதராபாத்திலும் ஒரு பூஜை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமும், ஜி.பி.விஜயக்குமாரின் செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை கூட்டாக தயாரிக்கின்றன.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய சட்ட மாணவர்கள் கைது

சென்னை: இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை யானைக்கவுனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.நள்ளிரவில் பாரிமுனை அருகே 4 மாணவர்கள் குடித்து விட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தனர். செந்தில் குமார் அவர்களை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை கிண்டடித்தர். மேலும் அவரது சட்டையில் இருந்த பேட்ஜ்ஜை பறித்தோடு சட்டையையும் கிழித்தனர்.பேட்ஜ்ஜால் அவரது கழுத்தில் கீறினர். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் திருப்பித் தாக்கவே அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்தக் கும்பலில் இருந்த 2 பேரை பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களான மீனாட்சி சுந்தரம் ( 25), ராஜூ (24) எனத் தெரியவந்தது.அவர்களை போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Source: Oneindia
இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

ரஜினியால் நல்லாட்சி தர முடியும்- சோ


சென்னை: இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம். ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) மாநிலமாக மாற வாய்ப்பு இருக்கிறது என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கூறினார்.தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் எனும் ரஜினி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு சோ பேசியதாவது:இது ஒரு விநோதமான அதே நேரம் ரொம்ப விசேஷமான ஒரு விழா. ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை இதுவரை என் கண்ணில் காட்டவே இல்லை.இந்த விழாவுக்கு வந்திருக்கும் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், ஏவி.எம். சரவணன், விழாவுக்கு வராத கமல்ஹாசன் என எல்லாரும் இந்த நூலைப் படித்திருக்கிறார்கள், என்னைத் தவிர. புத்தகத்தைப் படிக்காமலேயே அதை வெளியிட்டும் விட்டேன்!ரஜினியைப் பொறுத்தவரை அவர் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய 'ஷோமேன்' என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவரைப் போன்ற எளிய மனிதரைப் பார்க்க முடியாது.திரைத்துறையில் இருந்து கொண்டு எந்த பகட்டும் இல்லாமலிருக்கும் இப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டாரை எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா?ரஜினியைப் புரிந்து கொள்வது கஷ்டம். யாராலும் விவரிக்க முடியாத, அதிசயங்களை உள்ளடக்கிய மனிதர் அவர். ரஜினி அரசியல் பேசுவார், என்னையும் உங்களையும் மற்றவர்களையும் விட நன்றாக அரசியலை அலசுவார், ஆனால் அவர் அரசியல்வாதி கிடையாது. அவர் ஆன்மீகம் பேசுவார், ஆனால் சந்நியாசி இல்லை.இன்றைக்கு அவர் அளவுக்கு சினிமாவைத் தெரிந்தவர்கள் வெகு அரிது. ஆனால் அவர் முழுநேர சினிமாக்காரர் கூட கிடையாது! தன்னைச் சுற்றி வருகிற பாப்புலாரிட்டி, தனது நிஜ மதிப்பு எல்லாமும் தெரிந்தும் அமைதியாகவே இருக்கிற ஒரு அபூர்வ மனிதர் அவர்.கடவுளின் அற்புதப் படைப்பு ரஜினி என்றால் ஒரு சதவிகிதம் கூட மிகையல்ல. கடவுளின் கட்டளைகளை முழுமையாக, சரியாக, நேர்மையாகப் பின்பற்றும் வெகு அரிதான மனிதர் அவர். உலகில் எத்தனைப் பேர் இத்தனை நல்ல குணங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து இன்றைக்கு அப்படி யாருமில்லை.இன்றைக்கு எந்த நடிகராவது வருடத்தில் 15 நாட்கள் தன்னை முழுமையாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ரிஷிகேஷ் போன்ற ஒரு காட்டுப் பகுதியில், ஓட்ஸ் கஞ்சி குடித்தபடி காலத்தைக் கழிக்கத் தயாராக இருக்கிறார்களா... சொல்லிப் பாருங்கள், தலைதெறிக்க ஓடிப்போவார்கள்.நான்கூட ஒரு முறை அவரிடம், ஏன் அடிக்கடி இப்படி ரிஷிகேஷ், இமயமலை என்று போய்விடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், உங்களை மாதிரி ஆளுங்க முத்தைக் கொஞ்ச நாளாவது பார்க்காம இருக்கலாமேன்னுதான் என்றார் தமாஷாக. நான்தான் ரஜினிக்கு ஆலோசகர் என்று பலரும் தப்பாக நினைத்துக் கொண்டு எழுதி வருகிறார்கள். என் ஆலோசனையைக் கேட்டிருந்தால் அவர் எப்படி இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்க முடியும்! என் பேச்சைக் கேட்ட யார் உருப்பட்டிருக்கிறார்கள்? அவர் என் பேச்சை ஒன்று கூடக் கேட்கவில்லை. அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றிகள் அவருக்குக் கிட்டியிருக்கின்றன.அவர் செய்ததெல்லாம் கடின உழைப்பு, நேர்மையான முயற்சிகள் மட்டும்தான். அதற்கு கடவுள் அளித்த பரிசுதான் இத்தனை பெரிய இடம். 'எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்தவரிடம் அதுகுறித்த கருத்துக்களைக் கேள்; தாமாகவே ஒரு முடிவை மேற்கொள்வதைவிட, கற்றறிந்த, அனுபவத்தில் சிறந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று ஒரு முடிவை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது. அப்படிச் செய்பவனே நல்ல நிர்வாகி' என்பது மகாபாரதம் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம்.குஜராத்தில் நரேந்திர மோடி ஜெயித்தது கூட அப்படித்தான். இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம்.ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) பசுமையான மாநிலமாக மாற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏன், குஜராத்தைவிட ஒருபடி மேலே முன்னேறிவிடும், ரஜினியின் ஆட்சி அமைந்தால்.குறையில்லாத மனிதர் ரஜினி. நியாய தர்மம் பார்ப்பவர், இரக்க சிந்தனை மிக்கவர். முக்கியமாக ஊழலற்ற, மனதில் வஞ்சம் வைத்துக்கொள்ளாத நல்லவர். ரஜினி மாதிரி நல்லவர்கள் ஆட்சி செய்தால்தான் இங்கே ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடக்கும். அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.இந்தப் புத்தகத்தில் கூட அவர் அரசியலுக்கு வரப்போவது குறித்து ஏதோ சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாராம் அதை எழுதிய பெண்மணி. அது கிடக்கட்டும்... உலக சரித்திரத்தில் முதல் முறையாக அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து அரசியலுக்கு வா வா என்று எந்த நடிகரையாவது அழைத்திருக்கிறார்களா... ரஜினியை மட்டும்தான் இன்னமும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அந்த நம்பிக்கை இன்னமும் அப்படியேதான் இருக்கு. மற்றதெல்லாம் ரஜினி கையில்தான் இருக்கு.நாட்டை ஆளும் பிரதமர் அல்லது மாநிலத்தை ஆளும் முதல்வர் யாராக இருந்தாலும் தன்னைவிட பதவி உயர்வானது என்ற நினைப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர் ரஜினி.நல்லவரான ரஜினிக்கு பதவி மீதோ, பணத்தின் மீதோ எந்த ஆசைகளும் கிடையாது. கொஞ்சம் பணம், புகழ் வந்தால் சிலருக்கு தலைக் கனம் வந்துவிடும். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் வந்த பிறகும் ரஜினிக்கு தலைக்கனம் கிடையாது. இல்லாவிட்டால் சிவாஜி பட வெற்றியில் தன் பங்கு எதுவுமில்லை, அது ஷங்கர், சரவணனால் கிடைத்த வெற்றி என்று சொல்லுவாரா? அவர்களுக்காகவா அந்தப் படம் ஓடியது... தன் வெற்றியைக் கூட சொந்தம் கொண்டாட விரும்பாத மனிதர் அவர்.அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவக் கூடும். கண்டிப்பாகப் படியுங்கள்...' என்றார் சோ.முன்னதாக புத்தகத்தை சோ வெளியிட, ரஜினியின் இளைய மகளும் ஆக்கர் ஸ்டியோவின் நிர்வாக இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோரும் பேசினர்.இயக்குநர்கள் பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், கார்த்தி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.புத்தகத்தை எழுதிய டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். ஓம் புக்ஸ் இண்டர்நேஷனல் எனும் நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Oneindia

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......