Thursday, March 27, 2008

மழை சேத விவரம் : ஸ்டாலின் விளக்கம்


தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட சேத விவரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். சட்டசபையில் நடந்த மழை வெள்ள நிவாரணம் குறித்த விவாதத்தி்ன்போது ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் இம்மாதம் 10ம் தேதியிலிருந்து பலத்த மழை பெய்துள்ளது. இதில் குறிப்பாக தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மார்ச்சில் தமிழகத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவு 19.9 மில்லி மீட்டர் தான். ஆனால், இந்த ஆண்டு 158.03 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமாக மார்ச் மாதத்தில் பெய்யும் மழை அளவைவிட இது 8 மடங்கு அதிகம்.
இந்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 97 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 77 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இம்மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 278 பேர் 41 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர்மழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். 804 கால்நடைகள் இறந்துள்ளன.மழை வெள்ளத்தால் 47 ஆயிரத்து 257 ஹெக்டேர் நெற்பயிர்கள், 2 லட்சத்து 79 ஆயிரத்து 143 ஹெக்டேர் தானியம் மற்றும் பருப்பு வகைகளும் நாசமாகியுள்ளன. 62 ஆயிரத்து 882 ஹெக்டேர் தோட்டப் பயிர்கள், 41 ஆயிரத்து 68 ஹெக்டேரில் இதர பயிர்களும் சேதமாகியுள்ளன.
மொத்தம் 10 லட்சத்து 62 ஆயிரத்து 965 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்த கனமழையில் 9 ஆயிரத்து 863 கி.மீ சாலைகள், 945 பாலங்கள், 747 குளங்கள் மற்றும் வாய்க்கால்களும் மழையால் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: